விஜயாவின் நடிப்பில் மண்ணை தூக்கி போட்ட அண்ணாமலை.! சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..

siragadikka-aasai
siragadikka-aasai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் மீனா மீன் சமைக்க போக விஜயா நான் சமைக்கிறேன் என கூறுகிறார். அதற்கு பாட்டியும் சரி நீயே சமை உன்னுடைய கையால் இன்னைக்கு சாப்பிடுறேன் எனக் கூறிவிட்டு செல்ல அப்பொழுது முத்து சமைக்கிற இடம் எங்கு இருக்குனு உனக்கு தெரியுமா என கேட்க தெரியும் எனக் கூறிவிட்டு வாசல் பக்கமாக செல்ல அதனை பார்த்த மீனா அத்தை சமையல் கட்டு இந்த பக்கம் இருக்கு என கூறுகிறார்.

இவ்வாறு இவர் போனவுடன் முத்து என்னப்பா நடக்குது இங்க ஒன்னும் புரியலையே என தனது அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்க விஜயா எங்க  ஸ்டவ்வ காணும் எனக் கூற அதற்கு பாட்டி இங்க எங்க ஸ்டவ் இருக்கு விறகடுப்பில் தான் சமைக்கணும் என சொல்ல எனக்கு இதுல சமைக்க தெரியாது என விஜய் அதிர்ச்சி அடைகிறார். சரி விடு நானும் மீனாவும் சேர்ந்து சமத்துகிறோம் என பாட்டி கூற அதற்கு முத்துவின் அப்பா பணம் என கையை காட்ட பிறகு நானே சமைக்கிறேன் என மீனா சொல்லித்தர அதே போல் விஜயா சமைக்கிறார்.

அனல் அதிகமாக வீச தீய கம்மி பண்ணுங்க என மீனா சொல்கிறார் அது எப்படி பண்ணனும் என்று கேட்க அந்த பெரிய விறகு வெளியே இழுங்க என சொல்ல அதுக்கு பதிலாக இப்படி பண்ணலாம் என விஜயா தண்ணீரை தூக்கி அடுப்பில் ஊத்த மொத்தமாக அணைந்து விடுகிறது. சரி நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என கூறி வீட்டு மீனா எல்லா வேலையும் முடித்துவிட்டு நீ தான் பண்ணுனேன்னு சொல்லக்கூடாது நான் பண்ணுனதாக தான் சொல்ல வேண்டும் என விஜயா போகிறார்.

இதையெல்லாம் பார்த்த முத்து அம்மா காரணம் இல்லாம இதையெல்லாம் செய்ய மாட்டாங்க எதுக்காக வந்திருக்காங்க ஏன் இதெல்லாம் செய்றாங்க என ஒவ்வொருத்தராக கேட்க யாரும் பதில் சொல்லாத காரணத்தினால் சாமியிடம் சென்று உங்களுக்கு தெரியுமா பதில் சொல்லுங்க என முட்டிக் கொள்கிறார்.  பிறகு விஜயா பார்வதி போன் பண்ணி இருக்க திரும்பி போன் பண்ணி பேசும்பொழுது என்னால முடியல காலையிலிருந்து எவ்வளவு வேலை தான் செய்கிறது இந்த மீனா வேற எனக்கு என்னவோ மாமியார் மாதிரி அனைத்து வேலையும் சொல்லி வேலை வாங்குரா என்று சொல்ல பணத்துக்காக இறங்கிப் போய் தான் ஆக வேண்டும் என பார்வதி சொல்கிறார்.

மறுபுறம் மனோஜ் இந்த முறையும் இன்டர்வியூக்கு சென்று அங்கு எல்லாம் பொண்ணுங்களாக இருந்ததால் வந்துவிட்டதாக சொல்ல ரோகிணி அவருக்கு அறிவுரை சொல்ல அவர் நான் வேலை செய்கிற கம்பெனியில் எம்டி லேடியா இருக்கக்கூடாது. அவங்க கணவர் அவங்க வேலை செய்யக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார் பிறகு ரோகிணி சரி மும்பை ஆபீஸ் ஒன்னு இருக்கு அங்க போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுங்க என கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து மனோஜ் கிளம்பியதும் இவர் எந்த வேலைக்கும் போக மாட்டார் போல என ரோகிணியின் தோழி சொல்ல அவர் போல நானும் பரவால்ல அவரோட இருக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு அவருக்கும் சேர்ந்து தானே சம்பாதிக்கிறேன் என பேசுகிறார்.

இதனை அடுத்து இங்க மீனா விடம் பாட்டி கால் வலிக்குது என  சொன்னதும் அவருக்கு கால் பிடித்து விட அண்ணாமலை இதை பார்த்துவிட்டு விஜயாவை அழைத்து அங்கு பார் உனக்கும் மீனாவுக்கும் இங்கே சிறந்த மருமகளாக போட்டி தான் நடந்துக்கிட்டு இருக்கு அதுல மீனா ஜெயிச்சுட்டா உனக்கு பணம் கிடையாது போய் அம்மாவோட கால அமுக்கி விடு என சொல்ல நான் அவங்க கால அமுக்கணும் வந்தேன் அப்போ போய் காலை அம்முக்கு என்று சொல்ல சரி எனக் கூறி விட்டு விஜயா பாட்டிக்கு கால் அமுக்கி விடுகிறார்.

அப்பொழுது பாட்டி மனோஜ் கல்யாணம் செலவுக்கு பணம் இருக்கா என்று கேட்க அண்ணாமலை சிம்பிளாக தான் பண்ண போறோம் அதையெல்லாம் பார்த்துக்கலாம் பணம் எதுவும் தேவையில்லை என்று சொல்ல விஜய் அதிர்ச்சடைகிறார் இதோடு சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.