விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா தெரு பெருக்கி தண்ணீர் தெளிக்க போகா அதற்க்கு அன்னம் அக்கா தண்ணீர் எல்லாம் தெளிக்க கூடாது சாணம் தான் தெளிக்கணும் என விஜயாவிடம் கூற அது எல்லாம் எப்படி நான் செய்ய மாட்டேன் என்று சொல்லி அடம்பிடிக்கிறார். இதனை பார்த்த மீனா நான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யப்போக இந்த நேரத்தில் பாட்டி வெளியில் வருகிறார்.
இதனை பார்த்த விஜயா நானே செய்கிறேன் என கூறிவிட்டு செய்யப் போகிறார் மீனா சாணம் எடுத்து வந்ததை விஜயாவிடம் கொடுக்க அவர் மூக்கை பிடித்துக் கொண்டு தண்ணீரை ஊற்றி கையை வைத்து தெளிக்க மாமியார் இதனை வேடிக்கை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியான முத்து இது நிஜமா கனவா என்ன தெரிந்துக் கொள்ள மீனாவை கில்ல எதுக்கு கில்றீங்க என்று கேட்க கனவானு தெரிஞ்சுக்கத்தான் என்று சொன்னதும் மீனா திரும்பவும் முத்துவைக் கில்ல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க இப்ப நான் ஷாக்கில் இருக்கேன் எதுவும் எனக்கு தெரியாது என சொல்கிறார்.
இதனை அடுத்து சீதா ரவியின் போனை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு வர ரவி சீதாவை அழைத்து உட்கார வைத்து நான் செய்த புதிய டிஸ்ஷை சாப்பிட வைக்க சீதா சுருதி பற்றி பேசிய கலாய்த்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரவிக்கு போன் செய்த சீதா அது பொண்ணா இல்லையான்னு நான் கண்டுபிடிக்கிறேன் என போனை வாங்கி பேச கடுப்பாகிறார்.
ரவி இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக பேசுவது தெரிந்த டென்ஷன் ஆக அதே ஞாபகத்தில் டப்பிங் பேசுவதால் அது சுதப்பி விடுகிறது. இதனை அடுத்து விஜயா ரூமுக்கு சென்ற அண்ணாமலையிடம் நான் எதுக்கு இவ்வளவு வேலை செய்யணும் என் கையில் சாணம் வாசனை வந்துகிட்டே இருக்கு அருவெருப்பாய் இருக்கு என சொல்ல அவர் பணம் வேணும்னா இதெல்லாம் செஞ்சுதான் ஆக வேண்டும் என நக்கலாக பேசுகிறார்.
எனவே இதனை அடுத்து சரி இப்ப நான் என்னதான் செய்ய வேண்டும் என கேட்க நேர அம்மா கிட்ட போய் இந்த கேள்வியை கேளு அவங்க சொல்ற வேலையை அனைத்தையும் செய என கூறி அனுப்பி வைக்கிறார். எனவே வெளியே வரும் விஜயா அரிசி புடைத்துக் கொண்டிருக்கும் மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து கொடுங்க அத்தை நான் செய்கிறேன் இன்னைக்கு என்ன சமைக்கனும்னு சொல்லுங்க என்று கேட்கிறார்.
அப்பொழுது மீனா வந்து மீன் கழுவியாச்சு பாட்டி பாதிய குழம்பு வச்சிட்டு பாதிய வருத்தரலாம் என சொல்கிறார். இதனை உன் அத்தை கிட்ட சொல்லு அவ தான் சமைக்க போறா என்று சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் முத்து வெளியில் வந்து இன்னைக்கு மீன் குழம்பு நீங்க வச்சா தெருவே மணக்கும் என சொல்ல பாட்டி நான் வைக்கவில்லை என்று சொல்கிறார். உடனே மீனா அவளும் நல்லா தான் வைப்பா என்று சொல்ல மீனாவும் இல்லை என்று கூறுகிறார்.
அப்படின்னா இந்த வீட்டில் சமைக்க ஆளே இல்லையே என்று சொல்ல பாட்டி அதற்கு உங்க அம்மா தான் சமைக்கப் போறா என்று கூற முத்து அதிர்ச்சி அடைகிறார். நீங்க இங்க வந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதை என்னால நம்ப முடியல அதற்கான ரகசிய காரணம் என்னானு தெரியணும் இப்படி ஒரேடியா ஷாக் கொடுத்தால் எப்படி என புலம்புகிறார். பாட்டி நீ சமையல் பண்ணு நான் உன் கையாலேயே சாப்பிடுகிறேன் என்று சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார் இதோடு சிறகடிக்க சீரியல் ஆசையை சீரியல் இன்று எபிசோட் நிறைவடைகிறது