விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 20/6/23 இன்றைய எபிசோட்..

siragadikka-aasai
siragadikka-aasai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவை கையில் தூக்கி வர இதனை பார்த்த பாட்டி மற்றும் அன்னத்தின் அக்காவும் முத்துவுக்கு பொண்டாட்டி மேல எவ்வளவு ஆசை என கிண்டல் செய்து கொண்டிருக்க இதற்கு முத்து அவளுக்கு காலில் அடிபட்டு இருக்கு என்ற விஷயத்தை சொல்ல இருவரும் பதறுகிறார்கள் என்னாச்சு என விசாரித்து உள்ளே அழைத்துச் சென்று சேரில் உட்கார வைக்கிறார்.

பிறகு பாட்டி மீனாவுக்கு உத்தரம் கொடுக்க அப்பொழுது மீனா விடம் உனக்கு முத்துக்கும்  இன்னும்  எதுவும் நடக்கலன்னு எனக்கு நல்லாவே தெரியுது என்று சொல்ல  நான் அவரை நெருங்கி போனாலும் அவர் என்னை காயப்படுத்துற மாதிரி எதையாவது சொல்லிடுறாரு என்ன பண்றது என்று வருத்தப்பட நீங்க ஊருக்கு போகும் பொழுது இரண்டு பேரும் நல்ல புருஷன் பொண்டாட்டி தான் போவீங்க அதுக்கான ஏற்பாடுகளை நான் பண்றேன் என கூறுகிறார்.

எனவே இதனால் மீனா மகிழ்ச்சி அடைய பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை வீட்டுக்கு வர முத்துவும் வந்து அப்பா எப்பொழுது வந்தீர்கள் என கேட்கிறார் மேலும் என்ன எது என விசாரிக்க விஜயா வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்க அங்க பாருங்க யார் வந்து இருக்கா என்று என அண்ணாமலை சொல்கிறார். பிறகு விஜயா நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.

பாட்டி உண்மையாவே விஜயாவா வந்து இருக்கா என்று கேட்க, முத்துவும் அம்மா எப்படி வந்தாங்க அதெல்லாம் வர மாட்டாங்க என்று கூற அண்ணாமலை அதான் வந்துட்டாலே என்று சொல்ல பிறகு பாட்டி விஜயாவை கூப்பிட்டு உட்கார வைக்கிறார். விஜயா பாட்டி முன்னாடி மீனா மேல அக்கறை இருப்பது போல் நடிக்க முத்து அதை கண் சிமிட்டாமல் பார்த்து வியர்க்கிறார்.

பிறகு முத்து அம்மா வந்ததுக்கு ஏதோ காரணம் இருக்கு என்று அண்ணாமலையிடம் கேட்க அவர் ஊருக்கு வரியா என கேட்டேன் வரேன்னு சொன்னா கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். முத்து இது காரணம் கிடையாது என பாட்டியிடம் சென்று கேட்க அது என்னவோ அவ வந்து இருக்கா அதுவரைக்கும் சந்தோஷம் என்று சொல்கிறார்.

பிறகு அன்னத்தின் அக்காவிடம் போய் எதற்கு வந்திருக்காங்கன்னு தெரியுமா என்று கேட்க அவங்களுக்கும் தெரியவில்லையே பா என்று சொல்ல மீனா மீனா என்ன கூப்பிட்டுக் கொண்டே ரூமுக்கு வந்து அம்மா எதுக்கு வந்திருக்காங்க? உன்னை வேற ரொம்ப நல்லா பாத்துக்குற மாதிரி நடிக்கிறாங்க நீ தான் புத்திசாலி பொண்ணாச்சே யோசித்து சொல்லு என்று கேட்க‌ மீனா தெரியவில்லையே வந்து இருக்காங்க அதுவரைக்கும் சந்தோஷம் என்று சொல்ல முத்து படுத்துட்டு தூங்கு என கோபப்பட்டு விட்டு வெளியே சென்று விடுகிறார்.

இதனை தொடர்ந்து விஜயா தோப்பில் நின்று கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருக்க அண்ணாமலை அங்கு வர விஜயா அதான் வந்துட்டல உங்க அம்மாகிட்ட பணத்தைக் கேளுங்க என்று சொல்ல நான் எதுக்கு கேக்கணும் நீ உன்னுடைய கௌரவத்துக்காக ரோகிணிக்கு நகை போட போற அப்போ நீ தான் பணம் கேட்கணும் என்று சொல்ல நான் கேட்டா தருவாங்களா என விஜயா கேட்கிறார்.

நீ கேட்டா தர மாட்டாங்க ஆனா அவங்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல மருமகளா நடந்துக்க என்று சொல்ல நல்ல மருமகளா அது எப்படி என்று விஜய் கேள்வி கேட்க் சரி அது எல்லாம் உனக்கு எப்படி தெரிய போகுது என்ற அண்ணாமலை கிண்டல் செய்கிறார். மேலும் வேணும்னா மீனா கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கத்துக்க என்று சொல்ல நான் எதுக்கு அவகிட்ட கத்துக்கணும் என்று விஜயா கோபப்பட பணம் வேணும்னா நீ நல்ல மருமகளா நடந்துதான் ஆக வேண்டும் எனக் கூற அதற்கு விஜய்‌ அதிர்ச்சடைகிறார் இதோடு சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.