தனது தங்கையின் ஆசைக்காக மனநலம் பாதித்தவரை திருமணம் செய்துகொள்ளும் அக்கா.! வெளிவந்த சிப்பிக்குள் முத்து சீரியலின் இன்றைய ப்ரோமோ.

sippikkul muthu
sippikkul muthu

விஜய் தொலைக்காட்சி எப்போதும் மக்களை கவரும் வண்ணம் புது புது கதைகள் உடன் புது புது மாற்றத்துடன் புதிய நாடகங்களை ஒளிபரப்பும் அந்த வகையில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட நாடகம்தான் சிப்பிக்குள் முத்து. இந்த நாடகம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நாடகத்தில் அண்ணனாக நடிக்கும் கதாபாத்திரம் மாடலிங்கில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த ஜெய் டிசோசா என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது, 2021ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஆகாஷா தீபா’ என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் முதன்முதலாக அறிமுகமானார்.

தற்போது வெளியான இந்த நாடகத்தினன் புரோமோவில் பணக்கார வீட்டு பையன் ரெண்டு பேர் இருக்காங்க அதுல ஒருத்தன் அக்கா தங்கச்சி இரண்டு பேரில் தங்கச்சிய லவ் பண்றாரு அதை போய் தன்னோட வீட்டிலேயும் சொல்றாரு, அதுக்கப்புறம் இந்த தங்கச்சியோட அக்காவோ தன்னோட தங்கச்சியோட ஆசையை நிறைவேற்றனும் அப்படின்னு சொல்லிட்டு அவங்க வீட்ல போய் பேசுறாங்க.

அங்க போனதும் அந்த பையனோட அம்மா என்னமா எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லுன்னு சொல்றாங்க, என்னோட தங்கச்சி நிலாவுக்கு உங்க பையனை மாப்பிள கேட்கிறேன் அப்படின்னு சொல்றாங்க, அதுக்கு அவங்க நீ என்னோட மூத்த பையன கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னா தான் உன்னோட தங்கச்சிக்கு என்னுடைய இளைய மகனை நான் தருவேன் அப்படின்னு சொல்றாங்க.

இதைக் கேட்ட அந்த பொண்ணு ரொம்பவே குழப்பத்தில் இருக்காங்க இருந்தாலும் தங்கச்சியோட ஆசையை நிறைவேற்றி ஆகுனும் என்கிற எண்ணத்திலையும் இருக்காங்க. இதோட இந்தப் புரோமோவும் முடிவடைந்தது.