சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சீரியல், ரியாலிட்டி ஷோ காமெடி நிகழ்ச்சி போன்ற பலவற்றை விதவிதமாக நடத்தி வருகின்றன. அதில் எப்பொழுதும் டிஆர்பி யில் முதலிடத்தில் இருப்பது சீரியல் தான் அதிலும் குறிப்பாக முதல் இடத்தை பிடிப்பது பாரதிகண்ணம்மா மற்றும் ரோஜா சீரியல் தான் இந்த இரண்டு சீரியல்களும் தான் மாறி மாறி வந்த வண்ணம் இருக்கும்.
ஆனால் தற்போது இந்த இரண்டு டாப் சீரியல்களையும் ஓரம்கட்டி முதலிடத்தை பிடித்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி குடும்பம் கண்ணனிடம் பேசாமல் இருந்து வந்தனர் ஆனால் தனம் பிரசவ வலியால் கத்திய போது கண்ணன் வந்து உதவியது மற்றும் தனதிற்கு குழந்தை பிறந்தது போன்ற விறுவிறுப்பான சுவாரசியமான காட்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வாரத்தில் தனத்தின் குழந்தை ஒன்று புதிதாக வந்துள்ள நிலையில் இதுவரை தாய் போல் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் குழந்தையை ஓரங்கட்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. இதுபோல் பிறகு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் உச்சத்தில் மக்கள் மற்றும் ரசிகர்கள் தீவிரமாக கண்டுகளித்து வருகின்றனர்.
தற்போது டாப் டென் இடத்தில் உள்ள சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் என்னவென்று பார்ப்போம் முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர் தொடர் 9.74 புள்ளிகளை பெற்று உள்ளன இரண்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல என்னும் தொடர் 9.58 புள்ளிகளுடன் உள்ளன.
மூன்றாவது இடத்தில் பாரதி கண்ணம்மா தொடர் 9.25 புள்ளிகளுடனும் நான்காவது இடத்தில் சுந்தரி சீரியல் 9.7 புள்ளிகளுடனும் ஐந்தாவது இடத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் 9.2 புள்ளிகளுடனும் சன் டிவியின் பிரபல சீரியல் ஆனா ரோஜா சீரியல் தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.