ராஜா ராணி சீரியலை பின்னுக்குத்தள்ளி கெத்து காட்டும் பிரபல சீரியல்.! இந்த வார டிஆர்பி ரேட்டிங்.!

rajarani-
rajarani-

பொதுவாக தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் வாரம் வாரம் எந்த தொலைக்காட்சி சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகிக்கிறது என்று பார்ப்பதை  வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தற்போது ரசிகர்களும் இதனை பற்றி தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

அதுவும் முக்கியமாக தற்போது உள்ள அனைத்து சீரியல்களும் திரைப்படங்களின் கதை போல் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரை சீரியல்கள் 3 வருடம் 4 வருடம் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது விஜய் டிவியின் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதாவது ராஜா ராணி 2 சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த நிலையில் இந்த வாரம்  பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தை பிடித்தது. ஏனென்றால் தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் விரும்பும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் சில கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

குடும்ப இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் 2 ஆவது இடத்தினையும், நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவையும் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் மூன்றாவது இடத்தையும், எனது மனைவியின் கனவினை நிறைவேற்றும் ராஜா-ராணி-சீரியல் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

பிறகு தமிழன் சரஸ்வதியின் சீரியல் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது, மௌனராகம் சீரியல் 6 ஆவது இடத்தினையும், சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் 7-வது இடத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு சில நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகிய வந்தாலும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் காற்றுக்கென்ன வேலி,வேலைக்காரன், தென்றல் வந்து என்னைத்தொடும், பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, முத்தழகு போன்ற ஏராளமான சீரியல்களை பின்னுக்கு தள்ளி அடுத்த அடுத்த இடத்தை பெற்றுள்ளது.