சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன் மச்சான் சத்யாவை எக்ஸாம் எழுத வைப்பதற்காக ஒரு சின்ன டிராமா போடுகிறார். அது வெற்றியடைந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் நிலை வந்துவிடுகிறது.
இந்த டிராமாவுக்கு மீனாவும் உடந்தை. ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட்டை அவர் எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது முத்துவை காப்பாற்றி விட வேண்டும் என அவர் போராடுகிறார். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவந்து வழக்கம் போல பிரச்சினையாக மாறிவிடுகிறது.
எப்போதுமே மீனாவுக்கு ஆதரவாக பேசும் மாமனார் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் கடுமை காட்டி விடுகிறார். அதே போல் விஜயா வழக்கமாக திட்டுவதை விட இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகவே மருமகளை திட்டி தீர்க்கிறார்.
இப்படி வீட்டில் இருப்பவர்கள் திட்டியதால் நொந்து போன மீனா முத்துவை எப்படி வெளியில் கொண்டு வருவது என யோசனையில் இருக்கிறார். மறுநாள் காலை ஒரு வழியாக இன்ஸ்பெக்டரிடம் நடந்த உண்மையை சொல்லி எப்படியோ புருஷனை வெளியில் கொண்டு வந்து விடுகிறார்.
தனக்காக மாமா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்ததை பார்த்து உருகிப்போன சத்யாவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிட பாக முடிய இருக்கிறது. ஆனால் ரோிணி எப்போது எந்த பிரச்சினையை ஆரம்பிப்பார் என்று தான் தெரியவில்லை.
சமீப நாட்களாக இந்த சீரியலில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் முத்து மீனாவின் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இருப்பினும் சீரியல் தரப்பு கதையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்வது நல்லது.