அப்பொழுதெல்லாம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. மேலும் வாரத்தின் இறுதி நாளில் அனைத்து தொலைக்காட்சிகளில் டிஆர்பியை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி கிடையேயான போட்டி கடுமையாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் கடந்த சில மாதங்களாக டிஆர்பி-யில் முதலிடத்தை சன் டிவியின் கயல் சீரியல் தக்க வைத்து வந்தது.
ஆனால் இந்த வாரம் டிஆர்பி-யிலிருந்து கயல் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு பாக்கியலட்சுமி செய்தால் முதலிடத்தை பிடிக்கும் என யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
பல மாதங்களாக தனது மனைவிக்கு தெரியாமல் தனது கள்ளக்காதலி ராதிகாவுடன் தொடர்பில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்து பாக்கியா தனது மனதில் இருக்கும் அனைத்தையும் ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்பும் சொல்லிவிட்டு தற்பொழுது வீட்டை விட்டு வெளியேறிவுள்ளார்.
மற்ற சீரியல்களைப் போல கதையை சவுப்போல் இருக்காமல் விரைவில் உண்மை தெரிய வந்துள்ள நிலையில் இந்த சீரியல் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சன் டிவியின் கயல் சீரியல் இரண்டாவது இடதினை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தினை அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை அழகாக காண்பித்துக் கொண்டிருக்கும் சன் டிவியின் வானத்தைப்போல சீரியலும்,
நான்காவது இடத்தினை இரண்டு மனைவியை ஒரே நேரத்தில் சமாளித்து வரும் சுந்தரி சீரியலுக்கும் கிடைத்துள்ளது. பிறகு ஐந்தாவது இடத்தினை ரொமான்டிக் சீரியலான ரோஜா சீரியலும், ஆறாவது இடத்தினை அப்பா மூலம் கிடைக்காத பாசத்தினை தனது கணவரிடம் பெறும் ஒரு பெண்ணின் அழகான உணர்வை வெளிப்படுத்தும் சீரியலான கண்ணான கண்ணே சீரியல் பிடித்துள்ளது.