விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் பிரபலம்.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

vijay-tv
vijay-tv

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கி பல இடங்களில் காயங்களுடன் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இளவரசிகளின் மனதை மட்டும் இன்றி இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமான சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த படிக்காத பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நாயகன் அதே கிராமத்தை சேர்ந்த காதலியையும் திருமணம் ஏற்கனவே யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறாள்.

அதனை அறியாத அந்த நாயகனின் அம்மா கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என வேறு வழியில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் காதலியை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமலும்.. அம்மாவிற்காக திருமணம் செய்து கொண்ட முத்தழகையும் பிரிய மனம் இல்லாமல் தவித்து வரும் நாயகன் யாருடன் சேர்ந்து வாழ்வார் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது மேலும் இந்த சீரியலும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

muthazhaku
muthazhaku

இந்நிலையில் இந்த சீரியலில் ஷோபனா முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இரண்டாவது ஹீரோயினாக வைஷாலி நடித்த வரும் நிலையில் பூமிநாதன் என்கின்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் கதாநாயகனாக ஆஷிஷ் சக்கரவர்த்தி நடித்த வருகிறார்.

ashish
ashish

இவ்வாறு இந்த சீரியலில் நடித்து வரும் ஆஷிஷ் அண்மையில் இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது எனவே அந்த விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள இவர் இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரசிகர்கள் விரைவில் குணமடைய தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.