விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா என்னதான் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் நல்ல கதையுடன் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது.
ஆனால் கடைசியில் ஒரே ஒரு டுஸ்டை வைத்து ஒளிபரப்பபட்டு வந்தது அதனால் ரசிகர்கள் பலரும் அட இந்த சீரியல்ல முடிச்சு விடுங்க என கெஞ்சும் அளவிற்கு இழுத்துக் கொண்டே சென்றார்கள் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக இந்த சீரியல் முடிந்தது இந்த நிலையில் தற்பொழுது இரண்டாவது சீசன் மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
நடிகை விஜயலட்சுமி சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா என பல்வேறு சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். இவர் பழம்பெரும் நடிகை ஆவார் 70 வயதாகும் இவர் இன்று காலையில் தூங்கிக் கொண்டிருந்த பொழுதே உயிரிழந்துள்ளார் இந்த தகவல் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடைசி சில மாதங்களாகவே விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பூரண குணமடையவில்லை இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் பெரிதாக அடிபட்டது அதனால் மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார்.
அப்படி இருக்கும் நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிசர்ட் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் ஆனால் தூங்கிக் கொண்டிருந்த பொழுது தூக்கத்திலேயே உயிர் இழந்துள்ளார். இது விஜய் டிவி பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.