டிக் டாக் மற்றும் யூட்யூப் சேனல் போன்றவற்றின் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்கள் பலர்வுள்ளார்கள். அதிலும் சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமானோர் சோஷியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ்.
இவர் சொந்தமாக யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோகள் வெளியிடுவதை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தார் அதன் பிறகுதான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் அன்புடன் குஷி சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இவ்வாறு இவர் சமீப காலங்களாக சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பழம்பெரும் நடிகையான சாவித்திரி கேட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும்,அதில் சாவித்திரி அம்மாவின் கெட்டப்போட்டதற்கு பெருமைப்படுகிறேன் சாவித்திரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான நடிகர் திலகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் விருதுகளையும் பெற்றார் இத்திரைப்படம் தான் இவருக்கு சினிமாவில் சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தையும் பெற்று தந்தது.
இந்நிலையில் ரேஷ்மா சாவித்திரி கெட்டப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகிறார்கள். அதோடு ரேஷ்மா வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே என்ற பாடலுக்கு சாவித்திரி போல் நடித்தேன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் சாவித்திரி கேட்டபில் கீர்த்தி சுரேஷையே ஓவர்டேக் செய்து விட்டார் ரேஷ்மா என்று கமெண்டு செய்து வருகிறார்கள்.