தற்பொழுது உள்ள ஏராளமான சீரியல் நடிகைகள் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது மாற்றம் ரசிகர்களிடமும் கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்து விடுகிறார்கள். அதிலும் முக்கியமாக சில சீரியல்கள் நடிகைகள் தாங்கள் அறிமுகமாகும் முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்தவகையில் ஒருவர்தான் சின்னத்திரை நடிகை ராச்சிதா மகாலட்சுமி. இவர் பிரபல விஜய் டிவியில் 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் 2013ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அதோடு இவரின் உண்மையான பெயரான ரச்சிதா என்பதை மறந்து அனைத்து ரசிகர்களும் மீனாட்சி என்ற பெயராலேயே தற்போது வரையிலும் அழைத்து வருகின்றார்கள். இவரின் சிறந்த நடிப்பினை தமிழில் மட்டும் வெளிப்படுத்தாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2015ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் சீரியலில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தார்கள்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரட்சிதா மகாலட்சுமி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார் சமீபத்தில் சில காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதனை ஏராளமானோர் உண்மை இல்லை என்றும் வதந்தி என்றும் கூறி வரும் நிலையில் ரட்சிதா தரப்பில் இருந்து எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை.