பிரபுதேவா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

baakiya-lakshmi
baakiya-lakshmi

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக சின்னத்திரை நடிகைகள் இருந்து வருகிறார்கள். வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு நடிப்பு மற்றும் கவர்ச்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டே ஏராளமான சீரியல்கள் மற்றும் புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சன் டிவிக்கு அடுத்ததாக டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி.

இந்நிலையில் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கயல் சீரியல் டிஆர்பி-யில் முன்னாடி வகித்து வந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் தான் சன் டிவி சீரியல் டப் கொடுத்து வருகிறது.

இவர் இந்த சீரியல் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் ராதிகா மற்றும் கோபி பற்றிய உண்மை பாக்யாவிற்கு தெரியவந்துள்ள நிலையில் பாக்கியா தற்பொழுது எரிமலையாக வெடித்து வருகின்றார். நிலை ஏன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா கேரக்டரில் சுசித்ரா நடித்து வருகிறார்.

suchithra
suchithra

இந்த சீரியலில் இவரின் சிறந்த நடிப்பால் தற்பொழுது இவருக்கென எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு இந்த சீரியலின் மூலம் பிரபலம் அடைந்துள்ள இவருக்கு தற்பொழுது பிரபல முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

suchithra-1
suchithra-1

அதாவது நடனரும், நடிகருமான பிரபுதேவா நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் பிரபு தேவாவிற்கு அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர்கள் நடிக்க உள்ள திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலை இரு சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் சுசித்ராவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.