விஜய் டிவியால் மக்களுக்கு ஏற்படும் பெரிய இழப்பு.! அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என அறிக்கை வெளியிட்ட விஜய் டிவி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

vijay-tv-2
vijay-tv-2

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஏராளமான குடும்ப இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கை கழிப்பதற்காக இந்த தொலைக்காட்சிகள் இருந்து வரும் நிலையில் தற்போது முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவி  பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அது பொது மக்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சியில் முக்கியமான தொலைக்காட்சி தான் விஜய் டிவி ஸ்டார் குரூப்பை சேர்ந்த இந்த சேனலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஏராளமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் சீரியல்கள் என குழந்தைகள் முதல் இளைஞர்கள் என திறமை இருப்பவர்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தி உதவி புரிந்து வருகிறது எனவே மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக வருகிறது.

இவ்வாறு இதன் மூலம் பல இளமையான கலைஞர்கள் தற்பொழுது சினிமாவில் பிரபலமடைந்த உள்ளவர்கள் மேலும் பல திறமையான கலைஞர்கள் விஜய் டிவியில் பணியாற்றியும் வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு பெறுவதற்காக டிஸ்மி ஸ்டார் மற்றும் ஸ்டார் விஜய் அல்லது தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பணம் கேட்பதில்லை.

மேலும் எங்களின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை பெற பணம் செலுத்தியோ அல்லது வேறு வகையில் வழங்கவோ நாங்கள் யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை. ஸ்டார் விஜய் பெயரை பயன்படுத்தி வரும் எத்தனையோ போலியான வாய்ப்புகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் மற்றும் அந்த அலைவரிசையின் பெயரை பயன்படுத்தி எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ எங்களுடைய நிகழ்ச்சியில் நடிக்கவோ தோன்றவோ வாய்ப்பை உறுதி அளிப்பது தனிப்பட்ட தகவல்களையோ புகைப்படங்களையோ காட்சி துணி துணுக்கங்களையும் அல்லது பணத்தையோ கேர்ப்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

vijay tv
vijay tv

எத்தனையா தவறான நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் உங்களால் செலுத்தப்பட்ட பணம் பகிரப்பட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்பட்ட மற்றும் ஏற்படக்கூடிய எந்த விதமான இழப்பும் மற்றும் சேதம் ஆகியவற்றிற்கு இந்த நிறுவனம் மற்றும் அலைவரிசை எந்த ஒரு விதத்திலும் பொறுப்புள்ளதாகவோ அல்லது கடமை உள்ளதாகவோ இருக்காது என தெரிவித்துள்ளது.

இவ்வாறு அறிக்கை ஒன்றை சமூக வலைதளங்களில் விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில் இதனைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பெரிய விஷயம் நடந்திருக்கிறது என தெரிய வருகிறது அதாவது பலரும் உங்களுக்கு விஜய் டிவியில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தருகிறோம் எனக் கூறிய பணத்தை பறித்துவிட்டு பிறகு ஏமாற்றி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.