ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த சீரியல் நிறைவடைந்து பல வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருக்கும். மேலும் அந்த சீரியல் எத்தனை சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் மீண்டும் அதனை ஒளிபரப்புங்கள் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் ரசிகர்கள் மனதில் தற்பொழுது வரையிலும் மறையாத ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி.
இந்த சீரியல் தொடர்ந்து மூன்று சீசன்கள் வெளியானது முதல் செந்தில் சரவணனாகவும் ஸ்ரீஜா மீனாட்சியாகவும் நடித்திருந்தனர். இவர்களின் ஜோடி மிகவும் சூப்பராக இருந்த நிலையில் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் சீரியலில் இவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துவிடும்.
இரண்டாவது சீசனில் இவர்களின் குழந்தையாக சக்தி சரவணன் கனடாவில் இருந்து தனது குடும்ப உறவுகளை சந்திக்க வருகிறார். அங்கு இவரின் தாய் மாமன் மகளான தமிழில் மகள் தங்க மீனாட்சியை காதலிக்க ஆரம்பிக்கிறார். கொஞ்ச நாட்கள் போகப்போக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
அதே நேரத்தில் மீனாட்சியை முறைப்பையன் சரவண பெருமாள் காதலிக்கிறார். இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் சரவண பெருமாளை மீனாட்சி திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் மீனாட்சிக்கு சரவண பெருமாளை பிடிக்கவில்லை என்றாலும் போகப்போக மிகவும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து 3வது சீசன் தொடங்கியது. ரியோ மற்றும் ரக்ஷிதா இருவரும் நடித்து இருந்தார்கள். இவர் சீசனும் அமோக வெற்றிபெற்ற நிலையில் தற்பொழுது நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்பொழுது 4 சீசன் வெளியாகி இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது மீனாட்சி கதாபாத்திரத்தில் ஆலியா மானசாவும் சரவணன் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடிக்க இருக்கிறார்களாம். தற்பொழுது ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்த காரணத்தினால் வீட்டில் இருந்து வருகிறார். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.