சரவணனை பற்றி பெருமையாக கூறிய சந்தியா.! அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்.

raja rani 02
raja rani 02

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி 2 தொடரில் தற்போது பல்வேறு திருப்பங்கள் ஏற்படவுள்ளது, ஆரம்ப காலத்தில் சந்தியாவின் சின்ன வயது  கணவனே  ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதனையே லட்சியமாக கொண்டிருந்தார் அதற்கு அவரது பெற்றோர்களும் உறுதுணையாக இருந்தனர் ஆனால் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் சந்தியாவின் பெற்றோர்கள் இறந்து விட்டனர்.

அதன்பிறகு சந்தியாவின் அண்ணன் தன் மனைவியுடன் அமெரிக்கா செல்ல விரும்பியதால் அவசர அவசரமாக சந்தியாவை எவருக்காவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பினார். அப்பொழுதுதான் படிக்காத ஒரு நபரை, அவரது குணம் மற்றும் குடும்பத்திற்காக தனது தங்கச்சியை திருமணம் செய்து வைக்க நினைத்தார்.

சந்தியாவின் மாமியார் எனது மருமகள் எங்கேயும் வெளியே செல்ல தேவையில்லை எனது மகனுடன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று கூறுவார், இந்நிலையில் தான் சந்தியாவிற்கு தன் கணவன் படிக்கவில்லை என்பது தெரியவந்த நிலையில் சந்தியா அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுவார்.

காலப்போக்கில் சந்தியா அதனை ஒப்புக் கொண்டு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். தன்னுடைய கனவு ஐபிஎஸ் என்பதை எவ்வாறு வெளியே சொல்வது என்று குழம்பி இருந்தார். தற்பொழுது வந்த ப்ரோமோவில் சந்தியாவின் கணவர் சரவணன் அதை எப்படியோ தெரிந்து கொண்டு சந்தியாவை ஐபிஎஸ் கோச்சிங் சென்டருக்கு அனுப்புகிறார்.

அங்கு சந்தியா அனைவரிடமும் நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முழுக்க முழுக்க எனது கணவர் தான் காரணம். நான் எனது அப்பா அம்மாவை இழந்து மிகவும் கஷ்டப்பட்டேன். தன் மனைவியின் ஆசையையும், லட்சியத்தையும் உணர்ந்து என்னை ஐபிஎஸ் ஆக்க ஆசைப்பட்டார் என் கணவர்,இந்த இடத்தில் நான் நிற்பதற்கு காரணம் என் கணவர்தான் என்று கண்கலங்கி கூறுகிறார் சந்தியா.

அந்த நேரத்தில் சரவணனை உள்ளே அழைத்து அவரை பாராட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.