சமந்தாவிற்கு நேரில் சென்று பரிசு வழங்கி ப்ரொபோஸ் செய்த விஜய் டிவி ராஜா ராணி பிரபலம்.. வைரல் வீடியோ

raja rani
raja rani

Actress Samantha: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களை நடித்து பிசியாக இருந்து வந்த இவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.

எனவே இதற்காக சிகிச்சை பெற்று வந்த சமந்தா பிறகு குஷி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நடந்து முடிந்திருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி குஷி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் ரொமான்டிக் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தனர். இதனை அடுத்து மீண்டும் அமெரிக்காவிற்கு மயோசிட்டிஸ் நோய்க்காக சிகிச்சைக்கு சென்று இருக்கிறார்.

அங்கு மிகவும் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தாவை விஜய் டிவி பிரபலம் ஒருவர் சந்தித்து தன்னுடைய காதலை பகிர்ந்திருக்கும் நிலையில் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த பிரதோஷ் சமீபத்தில் சமந்தாவிற்கு அழகிய பரிசுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அவர் வாங்கி வைத்த அழகிய பரிசை கொடுத்து தனது காதலையும் வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகீர சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.