விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்துள்ளது. தற்பொழுது ராஜா ராணி சீசன் 1 சீரியலுக்கும் ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வந்ததால் ராஜாராணி சீசன்2 ஆரம்பித்து அதற்கும் ரசிகர்கள் அவர்களின் ஆதரவை தெரிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து ராஜா ராணி சீரியல் டிஆர்பி யில் நல்ல நிலமையில் ஓடிக்கொண்டிருந்தப்போது சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஆலியா மானசா சில காரணத்தால் விலகினார். அந்த கதாபாத்திரத்தில் புது ஹீரோயின் நடித்துவருகிறார் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் அவர் நடித்து வரும் நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்து வருகிறது.
இந்நிலையில் அதைத்தொடர்ந்து பார்வதிக்கு பாஸ்கரை திருமணம் முடிவு செய்து சில நாள் கழித்து திருமணம் நடந்தது பார்வதி முன்னான் காதலனான விக்கி பார்வதிக்கு தொடர்ந்து தொல்லை செய்து வந்தார். அதற்கு சந்தியா பெரிய பதிலடி கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பினர். மகன் ஜெயிலுக்கு போனதைக் கேட்ட விக்கியின் அப்பா சிவகாமியின் குடும்பத்தை அளிப்பதற்காக காத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மறு வீட்டிற்கு வந்த பார்வதியை கடத்திச் சென்றுவிட்டார். விக்கியின் அப்பா பார்வதியை கடத்திய விஷயம் யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து பார்வதியை காணவில்லை என்று எல்லோரும் தேடிப் பார்த்தபோது தான் பார்வதி வீட்டில் இல்லை என்று எல்லோருக்கும் தெரிய வந்தது அப்போது எல்லோரும் தேடி பார்க்கிறார்கள். எங்கும் பார்வதி இல்லை வீட்டில் உள்ள எல்லோரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.
எனவே,பார்வதியை கடத்திச் சென்றதை சிவகாமியால் ஏற்றுக் கொள்ள முடியாததால் மயக்கத்தில் கீழே விழுகிறார். எல்லோரும் சிவகாமிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்றும் ஒரு பக்கம் பார்வதிக்கு என்ன ஆகுமோ என்று வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து இனி என்ன நடக்கப்போகிறது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது பார்வதியை காப்பாற்றுவதற்கு சரவணனும் சந்தியாவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். விக்கி யுடன் சேர்ந்து விக்கியின் அப்பாவும் ஜெயிலுக்கு தான் போகப் போகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழில் ஏமார்ந்தவரிகளிடம் வச்சிக்கோ எங்கிட்ட வேண்டாம்.. ஷங்கருக்கு டோஸ் விட்ட தயாரிப்பாளர்…