விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. தற்போது இந்த சீரியலில் சிவகாமியின் இளைய மகன் ஆதி வேறு மதத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை காதலித்து கர்ப்பமாகி விட்டு ஏமாற்றி வந்த நிலையில் தற்போது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் ஆதியின் உண்மை முகத்தை சந்தியா தெரிய வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் சந்தியா, சரவணன் இருவரும் சிவகாமியிடம் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் எனக் கூற அதற்கு சிவகாமியும் யோசிக்கிறார் ஆனால் எப்படியோ சரவணன் அதையும் இதையும் பேசி சிவகாமியின் மனதை மாற்றுகிறார் ஆனால் சிவகாமி இவர்களுக்கு திருமணம் நடந்தால் ஜெசி அவருடைய மதத்தை சார்ந்த எந்த ஒரு அடையாளமும் இருக்கக் கூடாது இவ்வாறு இது அனைத்தையும் விட்டுவிட்டு தான் இந்த வீட்டிற்கு வர வேண்டும் என கண்டிஷன் போடுகிறார்.
இந்த நேரத்தில் சரவணனுடைய அப்பாவிற்கு விபத்து ஏற்படுகிறது இதன் காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பிறகு மருத்துவர்கள் ரத்தம் தேவைப்படுகிறது என கூற அந்த வகை ரத்தம் எங்கும் கிடைக்கவில்லை பிறகு ஜெசிக்கு அந்த வகை ரத்தம் என்பதால் ஜெசி எப்படியாவது மருத்துவமனைக்கு வரவழைக்க சிவகாமி முயற்சி செய்கிறார்.
இந்த நேரத்தில் சந்தியா ரத்தம் கொடுக்கும் பொழுது மட்டும் உங்களுக்கு மதம் தேவைப்படவில்லையா.? ஆனால் மருமகளாக ஏற்றுக் கொள்ள மட்டும் மதம் தடையாக இருக்கிறதா?என கேட்கிறார்.இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது இப்படிப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சரவணனின் அப்பாவான சைவம் ரவி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தில் அப்ப நான் காலியா என கிண்டலாக கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலைகள் சிவகாமி சந்தியாவின் அறிவுரையின்படி தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டு மனப்பூர்வமாக ஜெசியை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் ஆதி மற்றும் ஜெசியின் திருமணம் ஒட்டுமொத்த குடும்பத்தினர்கள் சமதத்துடன் நடைபெற இருக்கிறது.