விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இந்த இரண்டு சீரியல்களையும் இணைத்து தற்போது மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் இருக்கும் கண்ணம்மா, பாரதி மற்றும் ஹேமா, லட்சுமி ஆகியோர்கள் சந்தியா, சரவணன்வீட்டில் தங்கி வருகிறார்கள்.
இந்த சீரியல் தற்பொழுது அர்ச்சனா சாமி நகைகளை திருடி சாணியில் மறைத்து அதனை வரட்டி போல் சுவற்றில் தட்டி வைத்திருக்கிறார். மேலும் இது எல்லாம் காஞ்சவுடன் அடுத்த நாள் தனது அம்மா வீட்டிற்கு கொடுத்து விடலாம் என திட்டத்தை போட்டு இருந்தார் அர்ச்சனா.
இவ்வாறு காலை விடிந்ததும் சந்தியா கோவிலில் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்து கண்ணம்மா சந்தியாவை பேசி சமாதானப்படுத்துகிறார். பிறகு குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வெண்ணீர் வேண்டும் என கேட்கிறார். அப்பொழுது சிலிண்டர் தீர்ந்து விட்டதால் அடுப்பில் வைக்கலாம் என கன்னம் ஐடியா கொடுக்கிறார்.
எனவே அடுப்பு பற்ற வைப்பதற்காக மயில் விறகு மற்றும் அர்ச்சனா தட்டி வைத்திருந்த வறட்டி ஆகியவற்றை எடுத்து வருகிறார். பிறகு சரவணன், சந்தியா,பாரதி,கண்ணம்மா அவர்கள் இணைந்து அடுப்பை பற்ற வைக்கிறார்கள். அப்பொழுது சரவணன் அந்த நகையை பார்த்துவிட்டு அனைவரிடமும் கூறுகிறார் பிறகு அனைவரும் இதுதான் காணாமல் போன சாமி நகைகள் என கூறுகிறார்கள்.
பிறகு அனைத்து வறட்டிலும் இருப்பதை எடுக்கிறார்கள் இதனை யார் செய்திருப்பா என்ன சரவணன் கூற இந்த கேவலமான வேலையை அட்சரமாக தான் செய்திருக்க வேண்டும் என சந்தியா கூறுகிறார். பிறகு இதனைப் பற்றி யாரிடமும் கூறாமல் இருக்கிறார்கள் அர்ச்சனாவிற்கும் இதனைப் பற்றி தெரியவில்லை.
இந்நிலையில் அர்ச்சனா வரட்டியை பார்ப்பதற்கு வரும்பொழுது அங்கு வரட்டி காணாமல் போயிருக்கிறது இதனால் அதிர்ச்சியடைந்த இவர் மயிலை கூப்பிட்டு இங்கு இருந்த வறட்டிகள் எங்கே என கேட்கிறார் அதற்காக எல்லாம் ஏறி விட்டுட்டோம் எனக் கூறுகிறார். பிறகு ஒரு கோடி நகை போச்சு என அழுகிறார்.
அந்த நேரத்தில் வந்த செந்தில் என்கிட்ட சொல்லாமலே மறைச்சுட்ட அர்ச்சனா எனக் கூற செந்திலுக்கு இதனை பற்றிய விஷயம் தெரிந்து விட்டதோ என பயப்படுகிறார். ஆனால் செந்தில் சாம்பல் இல்லன்னா என்ன உனக்கு ஏதாச்சும் சாப்பிடணும்னு தோணுச்சுன்னா நான் தோப்புக்கு போய் மாங்காய் பறிச்சிட்டு வரேன் என கேட்கிறார் பிறகு செந்திலுக்கு உண்மை தெரியவில்லை என்று சந்தோஷத்திலும், ஒரு கோடி நகை போய் விட்டது என்ற வருத்தத்திலும் இருந்து வருகிறார் அர்ச்சனா.