குறுக்கு வழியில் யோசித்ததால் பளார் என ஜெசியிடம் அரை வாங்கிய ஆதி.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ராஜா ராணி 2..

raja-rani-32
raja-rani-32

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா மற்றும் இவருக்கு ஜோடியாக சித்து இருவரும் நடித்து வந்தார்கள் பிறகு ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் தற்பொழுது சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்பவர் நடித்த வருகிறார்.

மேலும் சமீப காலங்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக பல மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தனது எபிசோடில் சரவணனின் தம்பி ஆதி மதம் மாறி ஜெசி என்ற பெண்ணை காதலித்து கர்பமாக்கி அதன் பிறகு இந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஏமாற்றி வந்தான். எனவே ஜெசி எப்படியாவது ஆதியை பற்றி அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் அதற்கு சந்தியா உதவுகிறார்.

மேலும் இதன் மூலம் அனைவருக்கும் ஆதி பற்றிய உண்மையை சந்தியா தெரிய வைக்கிறார் இதன் காரணமாக ஆதியின் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆதி மற்றும் ஜெசியின் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அவருடைய தாய் மற்றும் பாட்டி இருவரும் வேறு மாத பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என எதிர்த்து வருகிறார்கள் ஆனால் சந்தியா விடாப்படியாக இருந்து வருகிறார் மேலும் சரவணனும் கடுப்பாகி பிறகு சிவகாமி மற்றும் தன்னுடைய பாட்டியிடம் சமதத்தை வாங்குகிறார்.

பிறகு சந்தியாவும் சரவணனும் ஜெசியின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். இதன் காரணமாக பிரச்சனை பெரியதாக சிவகாமி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அவள் வேறு மாதத்தை சார்ந்தவள் என்பது தெரியக்கூடாது என்றும் அவருடைய பெற்றோர்கள் இந்த வீட்டிற்கு வரக்கூடாது மேலும் அவள் இந்த வீட்டில் ஒரு அனாதையாக தான் வாழ வேண்டும் என கூறுகிறார் இதனால் அனைவரும் ஆத்திரம் அடைகிறார்கள்.

ஆத்திரமடைந்த ஜெசியின் பெற்றோர் ஆதியை திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஆதி ஜெபியை சந்தித்து என் குடும்பத்தில் இருப்பவர்கள் நம்மளுடைய திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என் அம்மா மனதை மாற்றிக்கொள்ள மாட்டார் வேறு வேறு வழியில்லை நாம் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் பின்னர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என குறுக்கு வழியில் யோசித்ததால் ஜெசி பலார் என ஆதி கன்னத்தில் பரகிறார். மேலும் ஜெசி நீ எத்தனை முறை சொன்னாலும் இது நடக்காது போய் அம்மாவின் மனதை மாற்று என கூறி அனுப்புகிறார் இதோடு ராஜா ராணி 2 சீரியல் எபிசோடு முடிவடைகிறது.