சிவகாமியிடம் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆதி தான் அப்பா என கூறும் ஜெசி.! பல திருப்பங்களுடன் ராஜா ராணி 2..

v
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2 சமீப காலங்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக பல மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது சந்தியா போலீஸ் ஆவதற்கு சிவகாமி ஒத்துக்கொண்ட நிலையில் போலீஸான பிறகும் குடும்பத்தினை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சந்தியாவும் எக்ஸாம் நல்லா எழுதி இருப்பதாக கூறி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது புதிதாக ஆதியால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதாவது சரவணனின் தம்பி ஜெசி என்ற பணக்கார பெண்ணை காதலித்து வருகிறார். மேலும் நான் மிகவும் பணக்காரன் என ஜெசியை ஏமாற்றி வரும் நிலையில் அடிக்கடி விலை உயர்ந்த பொருட்கள் என பொய் சொல்லி சப்ரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஜெசியின் வீட்டில் அவருடைய பெற்றோர்கள் வெளியில் சென்று விடுகிறார்கள் பிறகு ஆதியிடம் பேச வேண்டும் என்பதற்காக ஜெசி வர சொல்கிறார்.இருவரும் தவறு நடந்து வருகிறது எனவே இதனால் ஜெசி வருத்தப்படுகிறார் அர்ச்சனா வீட்டில் அனைவரும் சாப்பிட கொண்டிருக்கும் நேரத்தில் திருமணத்தைப் பற்றி பேச சரவணன் நீயும் பார்வதி போல் யாரையாவது காதலிக்கிறாயா என கேட்க அதற்கு ஆதி அப்படியெல்லாம் கிடையாது என கூறி விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் ஜெசி ஆதியின் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது மாசமாக இருப்பதை அனைவரிடமும் கூற சிவகாமி இப்படிப்பட்ட ஒரு பெண் வீட்டிற்குள் வரக்கூடாது என வெளியில் அனுப்பி விடுகிறார்.அதற்கு ஜெசி என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆதி தான் அப்பா இது மிகப்பெரிய உண்மை எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.