விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிப்பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்தி இந்த சீரியலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஐபிஎஸ்சாக வேண்டும் என தனது பெற்றோரின் கனவை தனது கனவாக நினைத்து படித்து வரும் ஒரு பெண் தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.
எதிர்பாராத விதமாக விபத்தில் தனது தந்தை மற்றும் தாயை இழந்து விடுகிறார் இந்த நேரத்தில் அவருடைய அண்ணன் தன்னுடைய சுயநலத்திற்காக படிக்காத ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார். பிறகு மாமியார் வீட்டில் பல பிரச்சனைகள் மற்றும் கொடுமைகளை அனுபவித்து வரும் அந்தப் பெண்ணின் கனவைப் பற்றி அவளுடைய கணவர் தெரிந்து கொள்கிறார்.
பிறகு அந்தப் பெண்ணின் கனவை குடும்பத்தினர்கள் எதிர்க்கும் நிலையில் எப்படியாவது தனது மனைவியை ஐபிஎஸ் ஆக்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார் அந்த கனவர். அந்த வகையில் இந்த சீரியலின் கதாநாயகியாக ஆலியா மானசா சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துதால் தற்பொழுது ரியா என்பவர் நடித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து ஹீரோவாக சித்து நடித்து வருகிறார். மிகவும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது சந்தியா எக்ஸாம் எழுத போகிறார் இந்த நேரத்தில் சிவகாமி இதனை தெரிந்து கொண்டு வீட்டிற்கு வந்த ஹால் டிக்கெட்டை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்திருக்கிறார். சந்தியாவின் தோழிகள் வீட்டிற்கு வர அவர்கள் தங்களுக்கு ஹால் டிக்கெட் வந்து விட்டதாக கூறுகிறார்கள்.
சந்தியா உடனே எனக்கு மட்டும் ஏன் ஹால் டிக்கெட் வரவில்லை எனக் கூறி பயத்தில் இருந்து வருகிறார். அதன் பிறகு சரவணனும் போஸ்ட் ஆபீஸ் சென்று கேட்டு நிலையில் அவர் உங்கள் வீட்டில் தந்து விட்டதாக கூறுகிறார்கள் இவ்வாறு தற்பொழுது சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அடுத்தது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் திடீரென்று ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜா ராணி 2 சீரியல் தற்போது வரையிலும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் ஒருநாள் கூடுதலாக சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் என்றும் இரவு 9:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.