விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2 இன்றைய எபிசோடில் சிவகாமி சந்தியாவை இந்த வீட்டில் மருமகள் மட்டும் நீ இல்லை நீ தான் சரியான குடும்பத்தலைவி என பாராட்டுகிறார் பிறகு ஆதி எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க யாரும் அவரிடம் முகம் கொடுத்து பேசவில்லை.
இதனால் கதறியழ மறுநாள் காலையில் எல்லோரிடமும் மீண்டும் பேச தொடங்க முயற்சிக்கும் நிலையில் யாரும் அவருடைய முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. இதனை தொடர்ந்து சந்தியா சரவணனிடம் எல்லோரும் ஆதியை ஒதுக்குவது தப்பு அவனிடம் பேசுங்கள் என சொல்ல அவன் மீது இன்னும் கோபம் குறையவில்லை என கூறுகிறார்.
இந்நிலையில் சிவகாமி மற்றும் ரவி இருவரும் தங்களுடைய ரூமுக்குள் நின்று கொண்டு இரண்டு பிள்ளைகளும் ஆதியை வெறுத்து விடுவார்களோ இதனால் பிரிந்து விடுவோம் என பயத்திலிருந்து புலம்பி வருகிறார்கள். அதன் பிறகு சரவணன் மற்றும் செந்தில் இருவரும் உட்கார்ந்து கடைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அங்கு வரும் அது இருவரிடமும் மன்னிப்பு கேட்டு தன்னிடம் பேசுமாறு கெஞ்சுகிறார்.
பிறகு சரவணனும் வேறு வழி இல்லாமல் மனம் மாறி ஆதிக்கு ஆறுதல் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து செந்திலும் அறிவுரை கூறிவிட்டு ஆறுதலாக பேசுகிறார் இதனை சிவகாமி தன்னுடைய கணவருடன் ரூமில் இருந்து பார்த்துக் கொண்டு சந்தோஷப்படுகிறார்கள் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
இவ்வாறு ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கிய காரணம் சந்தியா தான் எனவே சந்தியா ஒரு வழியாக தன்னுடைய மாமியார் வைத்த பரீட்சையில் பாஸாகி உள்ள நிலையில் விரைவில் தன்னுடைய ஐபிஎஸ் கனவை நிறைவேற்றுவதற்காக வெளி மாநிலத்திற்கு சென்று பயிற்சி எடுக்க இருக்கிறார்.