விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ராஜா ராணி 2வில் சந்தியா ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அவர் வெளி மாநிலத்திற்கு சென்று பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய மாமியாரிடம் பர்மிஷன் கேட்கிறார். ஆனால் சிவகாமி சரவணன் சமையல் போட்டியில் ஜெயித்த ஐந்து லட்சம் ரூபாய் திருடு போன நிலையில் அதனை கண்டுபிடித்து விட்டு நீ போகலாம் என கூறுகிறார்.
எனவே சந்தியா தன்னுடைய ஐபிஎஸ் மூலையினால் அந்த ஐந்து லட்சம் ரூபாய் திருடியது ஆதி தான் என கண்டுபிடித்து விடுகிறார். இதனை ஆதியிடம் கேட்க அவர் உண்மையை ஒப்புக்கொள்கிறார் பிறகு மேலும் உங்களுடைய சுயநலத்திற்காக என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க என கூற ஆத்திரமாய் இருந்த சந்தியா சுயநலவாதி உன் அண்ணன் கஷ்டப்பட்டு ஜெயித்த பணத்தை இப்படியா திருடுவது என ஆத்திரமடைந்து பேசுகிறார்.
உடனே சந்தியாவின் காலில் விழுந்து விடுகிறான். பிறகு சந்தியாவை பார்க்கும் பொழுது சரவணன் போலீஸ்காரரை தான் முக்கியம் திருடனை எந்த விதத்திலும் காப்பாற்றக் கூடாது என பேசுகிறார் ஆனால் அடுத்த நாள் காலையில் சிவகாமி கேட்க அதற்கு சந்தியா என்னால் திருடனை கண்டுபிடிக்க இயலவில்லை என கூற பிறகு நீ போலீஸ் ஆகக்கூடாது என சிவகாமி கூற அதற்கு சந்தியா கெஞ்சுகிறார். உடனே அர்ச்சனா சந்தியா தான் அந்த பணத்தை பதுக்கி வைத்திருக்கிறாள் என பழியை தூக்கிப் போடுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய அம்மா, அப்பா போட்டோ முன்பு நின்று சந்தியா புலம்புகிறார். அப்பொழுது அதனை அனைத்தையும் சரவணன் பேசி தீர்த்துக்கலாம் என சமாதானப்படுத்துகிறார். மேலும் சந்தியாவின் மீது அனைவரும் பழி போட்டு வரும் நிலையில் உடனே சரவணன் ஆதியை அடித்து வெளுக்கிறார். பின்னர் சரவணனை தடுத்து நிறுத்தி அறைந்துவிடும் சிவகாமி உன் பொண்டாட்டியை சொன்னதும் உனக்கு அவ்வளவு கோபம் வருகிறதா அவனை எதுக்கு அடிக்கிற என ஆத்திரமடைகிறார்.
பிறகு ஆதி திருடிய ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பற்றிய சரவணன் கூறி விடுகிறார் இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து விடுகிறது சிவகாமியும் ஆதியிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை நீதான் எடுத்து என கேட்க அவர் ஆமாம் என ஒத்துக் கொள்கிறார். பிறகு ஜெசி பணக்கார வீட்டு பொண்ணு என்பதால் நெக்லஸ் வாங்கி கொடுத்தேன் என கூறுகிறார் இதனை அனைத்தையும் தடுத்து நிறுத்துகிறார். சந்தியா பிறகு ஜெசி வயிற்றில் பிள்ளையோட நிச்சயதார்த்தம் வரை வந்து காத்துகிட்டு இருக்கா ஆதியை நாம பேசி சரி பண்ணிக்கலாம் என சொல்ல சிவகாமி நீ இந்த வீட்டுக்கு மருமகள் இல்லை நீ தான் சரியான குடும்பத்தலைவி என பாராட்டுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.