விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒலிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் தற்பொழுது ஆதியின் திருமணத்திற்காக அனைத்து வேலைகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சந்தியா ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதற்காக வெளி மாநிலத்திற்கு சென்று ட்ரைனிங் போக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் அங்கு போக வேண்டும் என்றால் நான் சொல்வதை செய்ய வேண்டும் என சிவகாமி கூறி இருந்தார்.
அதாவது சரவணன் சமையல் போட்டியில் ஜெயித்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை யார் திருடியது என்பதை கண்டுபிடித்தால் உன்னை வெளியூருக்கு செல்ல அனுமதிப்பதாக கூறிய நிலையில் அதேபோல் சந்தியாவும் தன்னுடைய ஐபிஎஸ் மூலையினால் ஆதி தான் இந்த பணத்தை திருடித்து என்பதை தெரிந்து கொள்கிறார்.
ஆனால் இதனைப் பற்றி ஆதியிடம் கூற ஆதி சந்தியாவின் காலில் விழுந்து இதனை யாரிடமும் சொல்லாதீங்க அப்படி சொன்னால் கல்யாணம் நின்று விடும் என கூறுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தியா அமைதியாக இருக்கிறார் மேலும் மறுநாள் என்னால் பணத்தை திருடிய நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என சந்தியா கூறுகிறார்.
இதன் காரணத்தினால் சந்தியாவை ஐபிஎஸ் ட்ரைனிங் போக விடாமல் செய்து விடலாம் என சிவகாமி சந்தோஷத்தில் இருந்து வருகிறார். மேலும் அதே சமயத்தில் சரவணன் திருடனை அழைத்து வருவதாக சொல்லி விட்டு ஆதியின் சட்டையை பிடித்து இழுத்து வருகிறார்.
இந்த பணத்தை திருடியது ஆதி தான் என அனைவரும் முன்னிலையிலும் உண்மையை போட்டு உடைக்க இதனால் சிவகாமி சந்தியாவை வெளியூர் செல்ல அனுமதிக்கிறார் இவ்வாறு சரவணன் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்ததில் ஆதி கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.