விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 வில் ஐபிஎஸ் கனவுடன் இருந்து வந்த சந்தியா சமீபத்தில் தேர்வு எழுதி இருந்த நிலையில் அதில் தேர்ச்சி பெற்று விட்டதாக சமீபத்தில் கடிதம் ஒன்று வீட்டிற்கு வந்துள்ளது. இவ்வாறு முதல் கட்டத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சந்தியா மிகவும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்.
மேலும் அடுத்த கட்ட தேர்விற்காக சென்னைக்கு ட்ரெய்னிங் போக வேண்டும் என தன்னுடைய மாமியாரிடம் பர்மிஷன் கேட்கிறார். எப்பொழுதும் போலவே சிவகாமி கண்டிஷன் போடுகிறார். அதாவது வீட்டில் இருந்த ஐந்து லட்சம் காணாமல் போய் உள்ள நிலையில் அதனை கண்டுபிடித்து விட்டு நீ ட்ரைனிங் போலாம் என சிவகாமி கூறுகிறார்.
இவ்வாறு பல மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பணத்தை ஆதி தான் திருடிய நிலையில் தற்போது மீண்டும் அந்த பிரச்சனையை சிவகாமி ஏற்படுத்தியதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆதி பதட்டத்தில் இருந்து வருகிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் ஆதி ஜெசி இருவருக்கும் திருமணம் நடக்க முடிவெடுத்துள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் ஆதி சொந்த வீட்டிலேயே 5 லட்சம் ரூபாய் பணம் திருடியது ஜெசிக்கு தெரிய வந்தால் திருமணம் நின்றுவிடும்.
இவ்வாறு லாஜிக்கே இல்லாமல் கதையை ஓட்ட வேண்டும் என்பதற்காக எப்பொழுதும் நடந்த பிரச்சனையை சம்பந்தமில்லாமல் புதுசாக ஆரம்பிப்பதால் இயக்குனர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் தற்பொழுது எல்லாம் ஐபிஎஸ் பரீட்சையில் வெற்றி பெற்று விட்டால் அதனை நேரடியாக லெட்டர் மூலம் தெரிவிப்பது வழக்கம் இப்படிப்பட்ட நிலையில் தேர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் கூடவே ட்ரைனிங் என லெட்டர் வந்துள்ளது சுத்தமாக சம்பந்தமில்லாமல் இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
இவ்வாறு சந்தியா பரீட்சையில் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் அர்ச்சனா பொறாமையில் இருந்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து என்ன நடக்க இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.