மதப் பிரச்சினையை இழுக்கும் சிவகாமி.? எதிர்க்கும் குடும்பத்தினர்கள்..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஒன்று தான் ராஜா ராணி 2.இந்த சீரியலில் தற்போது ஆதி ஜெசி என்ற பெண்ணை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்பொழுது அந்த பெண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நாடகம் போட்டு வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆதியை பற்றிய உண்மையான முகம் தெரிய வந்துள்ளது.

அதாவது ஜெசி தன்னுடைய அம்மா அப்பாவுடன் கமிஷனர் ஆபீசுக்கு சென்றேன் ஆதியின் மேல் கேஸ் கொடுப்பதற்காக செல்கிறார்கள் சந்தியா அங்கு சென்று நான் ஆதியை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறேன் சந்தியாவின் வார்த்தையை நம்பி அவர்களும் கேஸ் கொடுக்காமல் சென்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சந்தியா சரியாக பிளான் போட்டு தனது குடும்பத்தினர்களை அழைத்துக் கொண்டு பெண் பார்ப்பதற்காக செல்கிறார்கள்.

அங்கு அந்த பெண் ஆதியிடம் தனியாக பேச வேண்டும் என கூறியதால் இருவரும் ரூமுக்குள் செல்கிறார்கள் அங்கு ஜெசி இருப்பதை அறிந்து கொண்ட ஆதி ஜெசியை திட்டுகிறார். இதனை வெளியில் இருந்து ஒட்டு மொத்த குடும்பத்தினர்களும் கேட்டு விடுகிறார்கள். எனவே ஆதி ரூமை விட்டு வெளியில் வந்தவுடன் நாடகம் போட ஆரம்பித்த நிலையில் சரவணன் திட்டி விட்டு அடிக்கிறார். பிறகு சிவகாமி நீ எல்லாம் என் வயிற்றில் தான் பிறந்தியா இந்த வீட்டை விட்டு வெளியில் போ என விரட்டுகிறார்.

உடனே சரவணன் ஆதி மற்றும் ஜெசி இருவருக்கும் திருமணம் இது வைத்து விடலாம் என கூற திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஒரு பெண் நம் வீட்டிற்கு மருமகளாக வருவது சரியா என கூறி வருகிறார் பிறகு சரவணன் அந்தப் பெண் கர்ப்பமானதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை அவரை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என அனைத்தையும் பேசி சிவகாமியை சமாதானப்படுத்துகிறார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட சிவகாமி கண்டீஷன் ஒன்றை போட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறார்.அதாவது ஜெசி கிறிஸ்டின் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவர் கிறிஸ்டின் என்பதற்கான அடையாளம் ஒன்று கூட இருக்கக் கூடாது. அவங்க அம்மா, அப்பா யாரிடமும் பேசக்கூடாது ஒரு அனாதை போல் தான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என கூறுகிறார்.

இதனை கேட்டவுடன் சந்தியா இது நியாயமற்ற செயல் இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூற சிவகாமி அந்த விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.