கையும் களவுமாக பிடிபட்டு சரவணனிடம் படாத பாடுபடும் ஆதி.! திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட குடும்பத்தினர்கள்..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2.இந்த சீரியலில் தற்பொழுது சிவகாமியின் இளைய மகன் ஆதி ஜெசி என்ற பெண்ணை காதலித்து அவரை கர்ப்பமாக்கி தற்பொழுது அந்தப் பெண் யார் என்று தெரியாதது போல் நடித்து ஏமாற்றி வருகிறான். இந்நிலையில் ஜெசி அர்ச்சனாவின் வளைய காப்பு நிகழ்ச்சியின் பொழுது திடீரென மயங்கி விழுகிறார்.

அப்பொழுது ஜெசி கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது இதனால் சிவகாமி திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் இந்த வீட்டில் இருப்பது பாவம் எனக் கூறிய அசிங்கப்படுத்துகிறார்.இந்த நேரத்தில் ஜெசி என்னுடைய கர்ப்பத்திற்கு உங்களுடைய மகன் ஆதி தான் காரணம் எனக் கூற ஆதி இந்த பெண் யார் என்று எனக்கு தெரியாது எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனக் கூற அனைவரும் அதனை நம்பி ஜெசியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.

இதன் காரணமாக ஜெசி தன்னுடைய அம்மா அப்பாவுடன் சேர்ந்து கமிஷனர் ஆபீசில் புகார் அளிக்க செல்கிறார். ஆனால் சந்தியா சென்று அதனை தடுத்து நிறுத்தி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் ஆதி எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் தெரிய வைக்கிறேன் என கேட்கிறார் மேலும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்னுடைய கடமை எனக் கூறியதும் அவர்களும் சரி என குறிப்பிடுகிறார்கள்.

அதன் பிறகு சந்தியா ஆதிக்கு ஒரு பெண் பார்க்க சொல்வதாக கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.அங்கு அந்த பெண் ஆதியிடம் தனியாக பேச வேண்டும் என கூற பிறகு ஒரு அறைக்கு செல்கிறார்கள் அங்கு ஜெசி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறான் ஆதி.அதன் பிறகு ஆதி ஜெசியிடம் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைத்து விடு என மிகவும் திமிராக பேசுவதை ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் கேட்கும்படி சந்தியா செய்து விடுகிறார்.

இதனால் ஆதியின் சுயரூபம் அனைவருக்கும் தெரிய வருகிறது. அதன் பிறகு சரவணன் ஆதியை தாறு மாறாக அடிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அனைவரும் இணைந்து ஆதி ஜெசிக்கு திருமணம் ஏற்பாடு செய்கின்றார்கள் இவ்வாறு குடும்பம் மனத்தை காப்பாற்றிய சந்தியாவை சிவகாமி மிகவும் பெருமையாக நினைக்கிறார். இவ்வாறு சந்தியா போலீஸ் ஆவது இவருக்கு மிகவும் பெருமையை தந்துள்ளது.