பெண் குழந்தை பிறந்ததால் அர்ச்சனா செய்த கேவலமான சம்பவம்.! சிவகாமியால் சந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்..

Raja Rani 22
Raja Rani 22

விஜய் டிவியில் ட்ரைன் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சந்தியா பயிற்சிக்காக சென்னை சென்றுள்ளார் போலீஸ் உடையில் சந்தியா வந்து நிற்க சரவணன், சிவகாமி என அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு பக்கம் அர்ச்சனாவிற்கு வயிற்று வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறார் எனவே மையில் ஆட்டோவை அழைத்து ஹாஸ்பிடலுக்கு வருகிறார் சிவகாமியின் பக்கத்து வீட்டுக்காரரின் மருமகளுக்கும் பிரசவ வலி ஏற்பட இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். மயில் செந்திலுக்கு போன் போட்டுக் கொண்டிருக்க அவன் போனை எடுக்கவில்லை.

பிறகு சந்தியா பரோடுக்கு செல்ல சரவணன் சிவகாமி மற்றும் சிவகாமியின் கணவர் ஆகியோர்கள் ரோட்டில் நடந்து செல்கிறார்கள் போலீஸ் அதிகாரியாக உமாரியாஸ் பைக்கில் வர ரவி தவறுதலாக நடுரோட்டிற்கு சென்று விட பைக்கை நிறுத்தி அவரை திட்ட சிவகாமி பதிலுக்கு சண்டை போடுகிறார் பிறகு போலீஸ் அதிகாரி சென்று விட மருத்துவமனையில் இருந்து சிவகாமியின் பக்கத்து வீட்டுக்காரரின் மகனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அர்ச்சனாவிற்க்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் மையிலுக்கு தெரிய வருகிறது.

எனவே மையில் செந்திலுக்கு தகவல் தெரிவிக்க சென்று விடுகிறார் பக்கத்து வீட்டுப் பெண்மணி கீழே இருக்கும் கோவிலுக்கு சென்று விடுகிறார் மேலும் இருவரும் இல்லாத நேரத்தில் குழந்தையை காட்டாமல் தொட்டிலில் போட்டு விடுகின்றனர். பெண் குழந்தை பிறந்ததாக அர்ச்சனாவிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு பரோடில் எல்லோருக்கும் பயிற்சி கொடுக்க வந்திருக்கும் போலீஸ் உமாரியாஸ் தான் என சரவணன் சிவகாமிக்கு தெரிய வர அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் அர்ச்சனா தனக்கு பிறந்த பெண் குழந்தையை மாற்றி வைத்துவிட்டு ஆண் குழந்தையை தூக்கி வந்து தன்னுடைய தொட்டிலுக்குள் வைத்து விடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.