விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் தொடர்ந்து ஏராளமான மாற்றங்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சந்தியா கர்ப்பமாக இருப்பதாக பொய்யான ரிசல்ட் வந்த நிலையில் அவர் கர்ப்பம் இல்லை என்பது தன்னுடைய தோழியின் மூலம் தெரிந்து கொள்கிறார் எனவே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பிறகு கண்டிப்பாக அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் மேலும் குடும்பத்தினர்களும் இவருக்கு ஆதரவை கூறிவிட்டு வீடு திரும்புகிறார்கள். இதனால் குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் சரவணனை ஊர் முக்கியஸ்தர்கள் சரவணனை சந்தித்து தலைவர் சங்க தேர்தலில் நீ பரந்தாமனுக்கு எதிராக போட்டியிடு என கூறுகிறார்கள்.
பிறகு இதனைப் பற்றி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் சரவணன் கூற அவருடைய அப்பா ரவி சந்தியா ஐபிஎஸ் ஆகி வரும் பொழுது சரவணன் தலைவர் சங்கத்தில் தலைவராக இருந்தால் அவனுக்கு கொஞ்சம் கௌரவமாக இருக்கும் என கூற அதற்கு சிவகாமியும் ஆமாம் என கூறுகிறார் எனவே இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .
இந்த நேரத்தில் இன்னொரு புறம் பரந்தாமன் செந்தில் அவனுடைய ஜவுளி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு சென்று தலைவர் சங்க போட்டியில் எனக்கு பதிலாக நீ நின்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறேன் எனக் கூற அர்ச்சனா அதிர்ச்சடைகிறார்.
பிறகு இவரும் சரியான ஒப்புக்கொள்கிறார் செந்தில். வீட்டிற்கு சென்றவுடன் சரவணன் மற்றும் செந்தில் இருவருக்கும் இது தெரிய வர அண்ணன் தம்பி இருவரும் இந்தத் தேர்தலில் எதிரெதிராக போட்டியிடுகிறார்கள் எனவே இதன் மூலம் குடும்பம் ரெண்டாகுமா என்பதை வைத்து தான் இனிவரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.