கடைசி நேரத்தில் சந்தியா-சரவணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோழி.! கடுப்பில் சிவகாமி..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவரை அழைப்பதற்காக சரவணன், சிவகாமி, ரவி மூவரும் வந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் சரவணன் சந்தியாவிடம் சென்று கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் இங்கதான வரப் போறீங்க கவலைப்படாதீங்க என சொல்லி சந்தியாவை காருக்கு அழைத்து செல்ல அப்பொழுது ஜோதி ஓடி வந்து சந்தியாவிடம் நீ கர்ப்பமாக இல்லை அது பொய்யான பிரக்னன்சி என சொல்ல சரவணன் சந்தோஷப்படுகிறார்.

மேலும் சரவணன் நீங்க கவலைப்படாமல் ப்ராக்டிஸ் பயிற்சிகளை தொடருங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கூற சிவகாமியின் முகம் மாறுகிறது இதனைப் பார்த்த சந்தியா மன்னிப்பு கேட்கிறார். இது எல்லாம் நெனச்சு நீ கவலைப்படாதே இதையெல்லாம் முடிச்சிட்டு வந்து நீ குழந்தை பெற்று கொடுத்து தான வேண்டும் சரவணன் அப்பா ஆறுதல் கூறுகிறார்.

மேலும் அர்ச்சனா நீ வந்த நேரம் நல்ல நேரம் நீ அதிர்ஷ்டக்கார பையன் போல எல்லாம் நல்லதாகவே நடக்குது என சந்தியா போலீசாக முடியாது என்று நினைத்து சந்தோஷப்படுகிறார் இதனால் செந்தில் அர்ச்சனாவை திட்டுகிறார். இதனை சந்தியா கௌரி மேடத்திடம் கூற அவர் உனக்கு இதையெல்லாம் சரிப்பட்டு வராது நீ போய் ஊர்ல மாமியாருக்கு நல்ல மருமகளா இரு என சொல்ல சந்தியா கெஞ்சுகிறார்.

பிறகு இதனை பார்த்த சரவணன் சந்தியாவிற்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பேசுகிறார் மேலும் சந்தியா தீவிரவாதிகளை பிடித்த விஷயத்தை நாம் கூற கௌரி மேடம் சம்மதம் தெரிவிக்கிறார் எனவே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறார் சந்தியா மேலும் முன்பு இருந்ததை விட தற்பொழுது தன்னம்பிக்கையுடன் இருந்து வரும் நிலையில் கண்டிப்பாக இதற்கு மேல் தன்னுடைய நல்ல முயற்சியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.