அர்ச்சனாவிற்கு செந்தில் கொடுத்த அதிர்ச்சி.! வீடு கிளம்பும் சந்தியா..

raja rani 34
raja rani 34

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் சந்தியா கர்ப்பமாக இருப்பது உறுதியாக இருக்கிறது. எனவே இன்றைய எபிசோடில் சந்தியா கௌரி மேடத்தை சந்தித்து மேடம் நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி இருக்கிறேன்.

உங்களுக்கு சொல்லி விட்டு கிளம்பலாம் என உங்களை சந்திக்க வந்தேன் அவங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க என சொல்ல கௌரி மேடம் முதல்ல இதை என்கிட்ட சொல்லி இருக்கணும் நீங்க கர்ப்பமா இருந்தா கூட அவ்வளவு சீக்கிரமாக போய் விட முடியாது ஃபார்மாலிட்டி இருக்கு ப்ராப்பரான மெடிக்கல் சர்டிபிகேட் இருக்கணும்.

அதற்கான வேலையை போய் பாருங்க என்ன சொல்லி அனுப்பி வைக்கிறார் சந்தியாவும் மெடிக்கல் டெஸ்ட் எடுத்து ரிசல்ட் கேட்க ரிசல்ட் நேரடியாக உயர் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறுகின்றனர். இந்த பக்கம் அர்ச்சனா குழந்தையை கொஞ்சம் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் செந்தில் குழந்தையை கொஞ்சி விட்டு இதுவே பெண்ணாக இருந்திருந்தால் குடும்பமே கொண்டாடி இருக்கும் என சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.

செந்தில் வெளியே போனதும் டேய் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு பிறந்த பையனான உன்னை வைத்து ஒரு திட்டம் போட்டேன் ஆனால் இது இப்படி சொதப்பிடிச்சு சரி விடு உன்னை வைத்து சொத்துல பாதி எழுதி வாங்கிடுவேன் என அந்த குழந்தையிடம் கூறுகிறார். இந்நிலையில் தற்பொழுது சரவணன், சிவகாமி என அனைவரும் சந்தியாவை அழைத்து வருவதற்காக சென்னை கிளம்பி இருக்கிறார்கள்.

அர்ச்சனாவுக்கு அவரது அம்மாவிடம் இருந்து போன் வர சந்தியா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். பிறகு அவருடைய அம்மா நான் ஒரு ஜோசியரை பார்த்து இருந்தேன் அவர் உங்களுடைய பொண்ணுக்கு கண்டிப்பாக பொண்ணுதான் பிறக்கும் என்று சொன்னாங்க ஆனால் பையன் பிறந்தான் என சொல்ல அர்ச்சனா மழுப்புகிறார்.

பிறகு சிவகாமி, சரவணன் மற்றும் ரவி எனும் மூவரும் சந்தியாவை பார்த்த சந்தோஷப்படுகிறார்கள் சரவணன் மட்டும் கொஞ்சம் வருத்தப்பட சந்தியா நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.