தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பல சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2.
இந்த சீரியலில் தற்பொழுது தன்னுடைய ஐபிஎஸ் கனவு நிறைவேற்றிவிடும் என்ற ஆசையில் இருந்த சந்தியாவிற்கு பெரிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது அதாவது சந்தியா தன்னுடைய டீம்மில் சரியாக விளையாடாத காரணத்தினால் அவரை கோச் திட்டி வந்தார் மேலும் இதனைப் பற்றி சரவணனிடம் கூற நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் டெஸ்ட் கிட் வாங்கி வந்து டெஸ்ட் எடுங்கள் எனக் கூற சந்தியாவும் அதேபோல் செய்கிறார் பிறகு இவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இதனைப் பற்றி சரவணனிடம் கூற பிறகு சரவணன் தன்னுடைய வீட்டில் இருப்பவர்களிடம் கூறுகிறார் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைய சரவணன் இப்பொழுது குழந்தை வேண்டாம் எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சிவகாமி அதெல்லாம் முடியாது என சரவணனிடம் சண்டை போடுகிறார் மேலும் சரவணனின் அப்பாவும் குழந்தையை பெற்றுக் கொடுத்துட்டு சந்தியா ட்ரைனிங் போகட்டும் குழந்தையை பார்த்துக்கலாம் நம்ம எல்லாரும் இருக்குமே எனக் கூறுகிறார் பிறகு சரவணன் சந்தியாவிற்கு ஃபோன் செய்து பஸ்ஸுக்கு புக் செய்து விடுங்கள் என கூறுகிறார். இதனால் சந்தியா இவ்வளவு தூரம் வந்த பிறகும் தன்னால் போலீசாக முடியவில்லை என நினைத்து அழுகிறார். மேலும் தன்னுடைய அண்ணனிடம் இதனை பற்றி கூற அவரும் மகிழ்ச்சி அடைகிறார்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் அர்ச்சனா சந்தியாவிற்கு ஃபோன் செய்து குழந்தையை வளர்க்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என கூறுகிறார். இதற்கு சந்தியா நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது என் குழந்தையால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என கூறிவிட்டு போனை வைக்கிறார் எனவே அந்த குழந்தையை கலைக்க வைக்க வேண்டும் என அர்ச்சனா சந்தியாவிடம் இவ்வாறு பேசுகிறார்.