கர்ப்பத்தை உறுதி செய்த சந்தியா.. கௌரி மேடம் கொடுத்த அதிர்ச்சி.! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்கள்..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ராஜா ராணி 2 இன்றைய எபிசோடில் சந்தியாவை அப்துல் அவர்கள் திட்டிக் கொண்டிருக்க அப்பொழுது வரும் கௌரி மேடம் உங்களுடைய டீம் தான் ரொம்ப மோசமாக பர்பாம் பண்ணியது என சொல்ல அப்துல் சந்தியாவை அதிகம் திட்டுகிறார்.

சந்தியாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ன டீமில் இருப்பவர்கள் சொல்ல அப்துல் ஒரே ஒரு வாய்ப்பு தான் அதிலும் சரியாக செய்யவில்லை என்றால் அவங்களாக டீமில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என கூறுகிறார் பிறகு சந்திக்க வர சரவணன் பலமுறை போன் செய்து பார்க்கிறார். பிறகு இதனை பார்த்து விட்டு சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் எனக் கூற சந்தியா முதலில் சந்தோஷப்படுகிறார்.

மேலும் சரவணன் பரிசோதனை பண்ணி பாத்துட்டு என்னன்னு சொல்லுங்க என சொல்ல சந்தியா அங்கே இருக்கும் மெடிக்கல் சென்டரில் டெஸ்ட் கிட் கேட்டு வாங்க அந்த நபர் கௌரி மேடத்துக்கு தகவல் கொடுக்கிறார் ரூமுக்கு வரும் சந்தியா டெஸ்ட் ரிசல்ட் பார்க்கலாம் என கையில் வைத்து கொண்டு இருக்க அப்பொழுது சரவணன் போன் போட்டு என்ன எது என கேட்க இன்னும் பார்க்கவில்லை என சொல்ல உடனே பாருங்க என கூறுகிறார்.

பிறகு சந்தியா டெஸ்ட் கிட் பார்க்க கர்ப்பமாக இருப்பது உறுதியாக அதிர்ச்சி அடைகிறார் இதனை சரவணனிடம் சொல்ல சரவணன் அதிர்ச்சி அடைகிறார். இதனை பார்த்த கௌரி மேடம் அங்கு வந்து நீ கர்ப்பமாக இருக்கியா உன்னுடைய டெஸ்ட் ரிசல்ட் தானா இது என கேட்க அதற்கு கௌரி மேடம் உன்னால் இந்த பேச்சில் தொடர முடியாது அடுத்த பேட்ச் வந்து ப்ராக்டிஸ்ல சேர்ந்துக்கோ என சொல்ல சந்தியா வேறு வழி இல்லையா என கேட்க அதை நான் சொல்ல முடியாது நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என கூறுகிறார்.

பிறகு கௌரி மேடம் சரவணனிடம் இந்த விஷயத்தை கூறுகிறார் பிறகு சரவணனிடம் கௌரி சந்தியாவை வந்து அழைத்துச் செல்லுமாறு சொல்கிறார் அடுத்து சரவணன் எந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.