விஜய் டிவியில் கிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் தற்பொழுது போலீஸ் ட்ரைனிங்க்கா சந்தியா சென்னை சென்றுள்ளார்.
அங்கிருந்து சரவணன் சந்தியாவிடம் வீடியோ கால் பேசுகிறார் அப்பொழுது சந்தியா கேப் போட்டு இருக்கும் நிலையில் உடனே இதனை பார்த்து அர்ச்சனா முடி வெட்டிட்டா போல சிவகாமியிடம் கோர்த்து விடுகிறார் உடனே சிவகாமி முடியை காட்ட கூறுகிறார் இந்த நேரத்தில் சந்தியாவின் தோழி உன்னை அழைக்கிறார்கள் எனக் கூற சந்தியா சென்று விடுகிறார்.
பிறகு சரவணனிடம் சிவகாமி சந்தியா முடி வெட்டினாளா என கேட்க அதெல்லாம் இல்லை என சரவணன் கூறுகிறார். பிறகு பாக்சிங் போட்டி நடக்க அதில் சந்தியா வெற்றி பெற்று விடுகிறார். பிறகு அங்கு இருக்கும் கௌரி மேடம் சந்தியாவை அழைத்து தொப்பியை கழட்ட சொல்கிறார் அப்பொழுது சந்தியா முடி வெட்டாததை பார்த்து மிகவும் கோபமடைகிறார்.
உடனே சந்தியா முடி வெட்டாது என்னுடைய தவறுதான் மன்னித்து விடுங்கள் தற்போது என்னுடைய விக் பாய்ண்ட் என்ன என்பதை தெரிந்துக் கொண்டேன் இனி விளையாடும் போட்டியிலும் சிறப்பாக விளையாடவேன் எனக் கூற அதற்கு கௌரி மேடம் இதற்கு மேல் அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்க வேண்டும் சின்ன தவறு செய்தாலும் பனிஷ்மென்ட் பெரிய அளவில் இருக்கும் என எச்சரிக்கிறார்.
சந்தியாவும் சரி என ஏற்றுக்கொள்கிறார் அதன் பிறகு அடுத்ததாக சந்தியா மல்டி டாஸ்க் போட்டி இருப்பதாக கூற அந்த நேரத்தில் சந்தியா மயங்கி விழுகிறார். மறுபுறம் பக்கத்து வீட்டுக்காரர் பேத்தியை சிவகாமி கொஞ்ச அர்ச்சனா தன்னுடைய மனதிற்குள் இதுதான் உங்களுடைய உண்மையான பேத்தி என நினைக்கிறார்.