பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது பல திருபங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் தற்பொழுது சந்தியா தன்னுடைய குடும்பத்தினர்கள் ஆதரவுடன் போலீஸ் ட்ரைனிங்கில் ஈடுபட்டு வருகிறார் எனவே சரவணன், சிவகாமி, ரவி மூவரும் சந்தியாவுடன் சென்னை சென்றுள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சந்தியாவை சென்னையில் விட்டுவிட்டு சரவணன் தன்னுடைய அம்மா, அப்பாவுடன் வீட்டிற்கு கிளம்புகிறார் சந்தியா சரவணனின் பிரிவை தாங்க முடியாமல் அழ இதனைப் பார்த்த மற்றொரு போலீஸ் அதிகாரி இந்த பீலிங்ஸ் எல்லாம் இங்க வேண்டாம் என சந்தியாவை எச்சரிக்கிறார் பிறகு சந்தியாவும் ட்ரெய்னிங்கில் கவனம் செலுத்துகிறார்.
இவ்வாறு ஒரு புறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் அர்ச்சனா ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என ஓவராக சீன் போட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் அர்ச்சனாவை பார்ப்பதற்காக பக்கத்து வீட்டுக்காரர்கள் வரும் நிலையில் அவர் இந்த குழந்தை உங்கள் ஜாடையில் இல்லையே என கூறிவிட்டு செல்கிறார்.
இதனைக் கேட்டவுடன் செந்திலுக்கும் சந்தேகம் வருகிறது எனவே அர்ச்சனாவிடம் குழந்தையின் முகத்தில் கொஞ்சம் கூட நம்மளுடைய ஜாடை இல்லை இது நம்மளுடைய குழந்தை தானா இல்லை மருத்துவமனையில் இருந்து வேறு எந்த குழந்தையாவது தூக்கிட்டு வந்துட்டியா என கேட்க அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார் பிறகு சந்தியா கண்டுபிடிப்பதற்கு முன்னே இவன் கண்டுபிடித்துவிடுவான் போல என மனதிற்குள்ளேயே நினைத்துக் கொள்கிறார் அர்ச்சனா.
இவ்வாறு கிட்டத்தட்ட செந்திலுக்கு உண்மை தெரிய வந்துள்ளது. எனவே விரைவில் அர்ச்சனா செய்த பித்தலாட்ட வேலை இவர்களுக்கு தெரிய வரும் ஏற்கனவே செந்தில் இன்னொரு முறை தவறு செய்தால் அர்ச்சனாவை வீட்டை விட்டு கண்டிப்பாக வெளியேற்றி விடுவேன் என எச்சரித்த நிலையில் இந்த முறை என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.