போலீஸ் கெட்டப்பில் வந்த சந்தியாவிடம் சத்தியம் வாங்கிய மாமியார்.! சமாதானப்படுத்தும் சரவணன்..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் ஆனவுடன் இருந்து வந்த சந்தியா தற்பொழுது தன்னுடைய மாமியார் துணையுடன் பரீட்சையில் வெற்றி பெற்றுள்ளார் மேலும் இதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் சரவணன் அதிக ரொமான்ஸ் செய்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் ட்ரைனிங்க்காக சென்றுள்ள சந்தியா போலீஸ் டிரஸ் உடன் வெளியில் வர அதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் மேலும் சந்தியாவை கொஞ்சு குழாவிகிறார் சரவணன். மேலும் ஐபிஎஸ் ட்ரைனிங்கில் இருக்கும் பொழுது சில மாதங்கள் சரவணன் பார்க்க முடியாது என்பதற்காக வருத்தப்படுகிறார்.

ஆனால் சரவணன் அவர்கள் இருக்கும் போட்டோவை சந்தியாவின் அறையில் வைத்து 24 மணி நேரமும் அவரை கண்காணிப்பேன் அவரிடம் இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று வருத்தத்தில் இருக்கும் சந்தியாவை சமாதானப்படுத்துகிறார்.

மேலும் தற்பொழுது நடக்கும் போலீஸ் ட்ரைனிங்கில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு கோப்பை வழங்கப்படும் என்றும் அவர்கள் இருக்கும் ஊரிலேயே போஸ்டிங் போடப்படும் என்றும் சிவகாமி தெரிந்து கொள்கிறார். மேலும் அந்த கோப்பையை சந்தியா தான் பெற வேண்டும் என்றும் அவரிடம் சத்தியம் வாங்குகிறார்.

இதற்காக சந்தியா இனிமேல் ட்ரைனிங்கள் முழு கவனம் செலுத்தி கண்டிப்பாக முதல் இடத்தை பிடித்து அந்த கோப்பையை வாங்க முயற்சி செய்யவுள்ளவர். இவ்வாறு மாமியார் கூடியது சந்தியாவிற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவே தற்போது அனைவரும் சந்தியாவிற்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள் இவ்வாறு விறுவிறுப்பாக பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ராஜா ராணி சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆலியா மானசா இருந்தால் இந்த எபிசோடுகள் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என கமாண்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.