அர்ச்சனா செய்த தரங்கெட்ட வேலையால் ராஜா ராணி சீரியலை விமர்சிக்கும் நெட்டிசன்.! அதற்குள் சந்தியாவிற்கு முதல் கேஸ் கிடைத்துவிட்டது..

RAJA-RANI-2
RAJA-RANI-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்பொழுது ஐபிஎஸ் கண்ணுடன் இருந்து வந்து சந்தியா தன்னுடைய கணவர் துணையுடன் பரீட்சையில் தேர்வாகியுள்ள நிலையில் தற்பொழுது ஐபிஎஸ் ட்ரைனிங்காக வெளியூர் சென்றிருக்கிறார். எனவே சந்தியாவுடன் சரவணன், சிவகாமி, ரவி ஆகியோர்களும் சென்னை வந்துள்ளனர்.

இந்த நேரத்தில் அர்ச்சனாவிற்கு பிரசவ வலி ஏற்பட வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் வீட்டு வேலைக்காரி மயில் அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். பிறகு ஆண் குழந்தைதான் வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்து வந்த அர்ச்சனாவிற்கு தற்பொழுது எதிர்பாராத விதமாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அர்ச்சனா சிவகாமியின் தோழி சுமதியின் மருமகளுக்கு அர்ச்சனாவுடன் குழந்தை பிறக்கிறது ஆனால் அவருக்கு ஆண் குழந்தை எனவே அந்த குழந்தையை பக்கத்து தொட்டியல் இருப்பதை பார்த்து அர்ச்சனா தன்னுடைய குழந்தையை அவர்களுடைய தொட்டிலில் வைத்து விட்டு ஆண் குழந்தையை எடுத்து வந்து தன்னுடைய தொட்டிலில் வைத்துக் கொள்கிறார்.

இது யாருக்கும் தெரியாத நிலையில் அர்ச்சனாவின் கணவர் செந்தில் மருத்துவமனைக்கு வருகிறார் மேலும் குழந்தையின் ஜாடை நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யார் போலவும் இல்லையே என்று சந்தேகப்படுகிறார். பிறகு அர்ச்சனா அதனை சமாளித்துக் கொள்கிறார் இவ்வாறு தன்னுடைய பெற்ற பெண் குழந்தையை அடுத்தவருக்கு கொடுத்து இவ்வாறு தரம் கட்டம் வேலையை செய்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

மேலும் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக ஐபிஎஸ் ட்ரைனிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சந்தியா குழந்தை கை மாறி இருப்பதை கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே இதுதான் சந்தியா போலீஸ் ஆகிய முதல் கேசாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அர்ச்சனா செய்திருப்பதால் நெட்டிசன்கள் கடுமையாக ராஜா ராணி 2 சீரியலை விமர்சித்து வருகிறார்கள்.