சைக்கிளிங் ரேசில் பல பிரச்சனைகளை சந்திக்கும் சந்தியா.! சிக்கலில் மாட்டிக்கொள்ள போகும் சிவகாமி குடும்பத்தினர்கள்..

raja-rani-2
raja-rani-2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் எப்படியாவது ஐபிஎஸ் ஆகிவிட வேண்டும் என சந்தியா தன்னுடைய முழு முயற்சியையும் வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இவர் கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு பிரச்சனையை நிலவி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் சந்தியா எல்லோரும் அவரவர் சைக்கிள் அருகே செல்ல சந்தியா குறிப்பிட்டு இருந்த 23வது நபரில் அவருடைய பெயர் இல்லாமல் அதற்கு மாற்றாக ஐந்தாவது எண்ணில் அவருடைய பெயரை பார்த்து ஷாக்காகிறார். நான் 23 வது நபரை தான் குறிப்பிட்டிருந்தேன் என சொல்லி மாத்தி கொடுக்க சொல்ல அதற்கு அந்த அதிகாரி முடியாது என கூறிவிடுகிறார்.

சந்தியா அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த கேப்பில் ஸ்வேதா சைக்கிளில் பெடலை லூஸ் செய்து விடுகிறார். இதனை தொடர்ந்து ஆதி ஜெசி கூட்டிக்கொண்டு வெளியே செல்வதாக சொல்லிவிட்டு பிறகு இந்தாங்க வீட்டு செலவுக்கு பணம் என கொடுக்க சிவகாமி சந்தோஷப்படுகிறார். பிறகு மனதிற்குள்ளேயே ஆதி என் பணத்தை ஒத்த பைசா தர மாட்டேன் இது என் மாமனார் வீட்டு படம் என சந்தோஷப்படுகிறார்.

மேலும் சந்தியா எப்படியாவது இந்த சைக்கிளிங் ரேசில் ஜெயிக்க வேண்டும் என சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்க பலபேர் எண்ணெயில் வழுக்கி கீழே விழுகின்றனர் அடுத்தது இந்த பக்கம் செந்தில் மற்றும் அர்ச்சனா வீட்டில் தேர்தலில் இருப்பது பற்றி சொல்ல வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க சிவகாமி அவரது கணவரும் சரவணன் தேர்தலில் நிற்பதை பற்றி பேசிக்கொண்டு சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால் இவர்கள் தங்களைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள் என நினைத்து செந்தில் இதில் உங்களுக்கு சம்பந்தமா எனக் கேட்க இதில் எங்களுக்கு சந்தோஷம்தான் என சொல்ல செந்திலும் அர்ச்சனாவும் தங்களைப் பற்றி தான் சொல்கிறார்கள் என தவறாக புரிந்து கொள்கிறார்கள் மேலும் இதனால் பெரிய பூகம்பம் வீட்டில் நடக்க இருக்கிறது.