விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் முதல் சீசன் வெற்றிகரமாக ஓடிய நிலையில் தற்பொழுது இரண்டாவது சீசன் அறிமுகமாகிய அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த சீரியல் தான் ராஜா ராணி 2.
தற்பொழுது சந்தியா ஐபிஎஸ் ஆகுவதற்கான ட்ரைனிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சென்று இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இங்கு சரவணனுக்கு சங்க தலைவர் போட்டியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது எனவே சிவகாமியும் சந்தியா ஐபிஎஸ் ஆகிவிட்டால் நீ சங்கத் தலைவராக ஜெயித்து விட்டால் நீயும் ஒரு பொறுப்பில் இருப்பாய் என கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் செந்திலும் ஒருபுறம் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமலேயே இந்த தேர்தலில் சரவணனுக்கு எதிராக போட்டியிட இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் சரவணனுக்கு எதிராக செந்தில் இந்த தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்பது தெரிய வருகிறது இதனால் அனைவரும் கோபப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில் சரவணன் செந்திலை அடிக்க செல்கிறார் அப்பொழுது அர்ச்சனா நீங்கள் இந்த தேர்தலில் கலந்துகொண்டு என்னுடைய புருஷனை ஜெயித்துக் காட்டுங்கள் என சவால் விடுகிறார் உடனே சிவகாமி என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறார். சரவணன் எப்படி அவன் என்னிடம் சொல்லாமல் இது போன்ற ஒரு முடிவை எடுக்க முடியும் எனக் கூறி ஆத்திரமடைகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் அண்ணன் தம்பி இருவரும் போட்டி போடும் நிலையில் இதில் யாராவது ஒருவர் தோற்று விட்டாலும் இது குடும்பம் இரண்டாக உடைய அதிக வாய்ப்பு இருக்கிறது இதனை தெரிந்து கொண்டு சிவகாமி வருத்தமடைகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.