விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் இன்று எபிசோடில் ஆதி ஜெசி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். இதுக்கு ஏகப்பட்ட செலவாகுது இதெல்லாம் எனக்கு தேவைதானா இதுக்கு தான் கல்யாணம் வேண்டாம் என்று அடிச்சிகிட்டேன் யார் என் பேச்சை கேட்டாங்க என ஆதி புலம்புகிறார். உடனே ஜெசி நீ எல்லாம் ஒரு மனுஷனா என சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு வீட்டில் இரவு 7 மணி ஆனதும் சரவணன் சந்தியா என இருவரும் ஒரே நேரத்தில் போன் ட்ரை பண்ண பிறகு சந்தியா சரவணனுக்கு ஃபோன் பண்ணி இவ்வளவு நேரம் யார்கிட்ட பேசிகிட்டு இருந்தீங்க என சத்தம் போட சரவணன் கொஞ்ச நேரத்துக்கு கலாய்த்து பேசிவிட்டு நீங்க போன் பண்ணா போன் எடுக்க இல்லைன்னா ஒரு வேலையும் கூட ஆக மாட்டேங்குது என சொல்ல சும்மா இருந்தா அப்படித்தான் உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன் என விடுகதை ஒன்றை கூறுகிறார்.
அதாவது மூணு பொண்ணுக்கு ஒரே முகம் ஒரு பொண்ணு ஆத்துல இன்னொரு பொண்ணு காட்டுல இன்னொரு பொண்ணு வீட்ல அது என்ன என்ன கேட்டு நாளைக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறுகிறார்.
பிறகு சந்தியா ப்ராக்டிஸ் நடந்த அன்று தகவல்களையும் சரவணனிடம் கூற பிறகு அந்த பொண்ணு தூக்கிக்கிட்டு ஓடாமல் ஓடி இருந்தால் நிச்சயம் நீங்க இரண்டாவது, மூன்றாவது ஆளாக ஓடி வந்திருக்கலாமென சொல்ல பிறகு சந்தியா தனியாக ஓடிப் பார்க்க முடிவு செய்கிறார்.
இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஜோதியின் உதவியுடன் ஓடி வர அப்துல் எடுத்துக் கொண்ட அதே அளவு நேரத்தில் வந்திருப்பதை பார்த்து இருவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
இந்த பக்கம் சரவணன் சந்தியா கேட்ட விடுகதைக்கு பதில் என்ன குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மைலும் மற்றும் ஜெசி வரை இருவரிடம் பதில் கேட்க அவர்களும் தெரியாமல் முழிக்கின்றனர். பிறகு கடையில் சக்கர இடம் கொஞ்ச நேரத்தில் யோசித்து பதில் சொல்ல சரவணனும் சூப்பர் என கூறுகிறார்.