விஜய் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவி விளங்கி வருகிறது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் ராஜா ராணி 2 இன்றைய எபிசோடில் சரவணன் இரவில் நேரம் ஆகியும் தூங்காமல வீட்டின் நடுவில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார். பிறகு அங்கு சிவகாமி வர அவரிடம் ஹால் டிக்கெட் வராது பற்றி வருத்தத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். போஸ்ட்மேன் வீட்ல கொடுத்துட்டாங்கன்னு சொல்றாரு நீங்க எங்கேயாவது பார்த்தீர்களா என கேட்க சிவகாமி என்னை சந்தேகமாக பாத்தியா எனக் கேட்கிறார்.
ஐயோ, அப்படியெல்லாம் கிடையாது எங்கேயாவது சொருகி வச்சிட்டு போயிருக்கலாம்ல என கூறுகிறார் சரவணன் இதனை தொடர்ந்து தனது ரூமுக்குள் போக அங்கு சத்தியா அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கிறார்.பிறகு எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது நான் யாருக்கு என்ன தப்பு செஞ்சேன் என்னை சரவணனிடம் கூறி அவரின் தோளில் சாய்ந்து அழுகிறார். மறுநாள் காலையில் ஆபீசுக்கு சென்று இது குறித்து விசாரிக்கலாம் என சரவணன் கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ஆதி தனது காதலி ஜெசியை ரோட்டில் சந்தித்து பேசுகிறார் அப்பொழுது அர்ச்சனா பார்த்து விட அங்கிருந்து ஆதி எஸ்கேப்பாக முயற்சி செய்ய அவர்களை தடுத்து நிறுத்தி என்ன என்று விசாரிக்கிறார், பிறகு இருவரும் காதலிக்கிறோம் என ஆதி கூறுகிறார். பிறகு அர்ச்சனாவிடம் அவ கிறிஸ்டியன் அதனால நம்ப வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு பயமா இருக்கு என கூறுகிறார்.
பிறகு அர்ச்சனா உங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைக்கிறேன் அத்தை கிட்ட நான் பேசுகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த பெண்ணை ஆதிக்கு கட்டி வைத்து விட்டால் அத்தை அவமானம் தாங்க முடியாமல் அமைதியாகிவிடுவார் என நினைக்கிறார். ஆதியுடன் சேர்த்து வைத்தால் ஜெசி காலம் முழுக்க என் காலடியில் கிடப்பா அதனால் அவளை வைத்து சந்தியாவின் கொட்டத்தை அளக்கலாம் என அர்ச்சனா திட்டம் போட்டுள்ளார்.
வீட்டில் சிவகாமி அனைவரையும் ஒன்றாக கூப்பிட்டு சரவணனிடம் உங்க அப்பா ஹால் டிக்கெட்ட பாத்தியா என கேட்கிறார் நீயும் ஹால் டிக்கெட் பார்த்தீர்களா என கேட்கிற அப்ப நான் தான் ஹால் டிக்கெட்டை மறைச்சு வச்சிருக்கேன் என்று நீங்கள் சந்தேகப்படுறீங்களா என கூறுகிறார். பிறகு சந்தியாவிடம் சில கேள்விகளை கேட்க போவதாக சொல்லி இன்னமும் போலீசாக வேண்டும் என்ற உறுதியோடு தான் இருக்கியா என கேட்க அது என்னுடைய லட்சியம் என் அப்பா, அம்மாவோட கனவு என சந்தியா கூறுகிறார்.
பிறகு சிவகாமி போலீஸ் வேலை என்றால் இரவும் பகல் என்று பார்க்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் குடும்பத்தை கவனிக்க முடியாது இந்த ஊருக்கு நாங்க வந்தபோது பெரிய வசதி எல்லாம் கிடையாது நாலு பிள்ளைகளை பெத்தெடுத்து நான்தான் எல்லா வீட்டு வேலையும் பார்த்து கொள்ள வேண்டும் புருஷன் வேலை செய்து வீட்டிற்கு வரும்போது பணத்துக்காக தான் வேலை போயிட்டு என் நாலு பிள்ளைகளையும் யாரு சோராக்கி போடறது? அவருக்கும் பணிவிடை செய்ய வேண்டும் நீ வேலைக்கு போயிட்டா என் புள்ள சரவணனுக்கு இதையெல்லாம் எப்படி செய்ய முடியும் என கேட்கிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.