சந்தியாவை மிரட்டுவதாக வந்து பல்பு வாங்கி சென்ற அர்ச்சனா.! இந்த அசிங்கம் உனக்கு தேவைதானா..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2.இந்த சீரியலில் சமீப காலங்களாக பல பிரச்சனைகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வந்தார்கள்.

தற்பொழுது தான் சந்தியாவின் குடும்பத்தினர்கள் தென்காசிக்கு வந்துள்ள நிலையில் பல விறுவிறுப்பான எபிசோடுகள் அரங்கேறி உள்ளது அதாவது வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் சென்னையில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் சரவணன் இன்ஸ்டிட்யூட்டிற்கு நல்ல வேலை ஒன்னும் ஆகவில்லை எனக் கூறுகிறார்.

அதற்கு சந்தியா இனிமேல் இன்ஸ்டியூட் போகத் தேவையில்லை எக்ஸாம் தான் என கூறுகிறார் மேலும் இதற்கு மேல் ஹால் டிக்கெட் வந்துவிடும் எனக் கூற பிறக அனைவரும் சென்றுவிடுகிறார்கள். பிறகு சிவகாமி வெலியில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது போஸ்ட் மேன் வந்து சந்தியாவிற்கு போஸ்ட் வந்திருப்பதாக தருகிறார்கள் இதனைப் பார்த்ததும் ஹால் டிக்கெட் என்பதை அறிந்துக் கொண்ட சிவகாமி யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுகிறார்.

பிறகு சந்தியா தடாது தோழியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஹால் டிக்கெட் வந்திருப்பதாக கூறுகிறார். அதன் பிறகு சந்தியாகவும் அனைவரிடமும் ஹால் டிக்கெட்டை யாராவது வாங்கினீங்களா என்று கேட்டதற்கு யாரும் எதுவும் கூறவில்லை. எனவே சரவணன் போஸ்ட் ஆபீஸ் செல்வதாக கூறிவிட்டு கிளம்புகிறார்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் சந்தியா சமைப்பதற்கு கிச்சனிற்குள் செல்கிறார் அதனை பார்த்து வந்த அர்ச்சனா என்ன சந்தியா கடுப்பு கடுப்பா வருதா வரும் கண்டிப்பா வரும் என நக்கலாக போற உடனே சந்தியா அர்ச்சனா எனக்கும் அத்தைக்கும் சின்ன மனசுஸ் தாபம் அது சரியாகிவிடும் அதில் நீ குளிர் காயாதே அப்புறம் நீ இந்த வீட்டிற்கு செய்த ஒவ்வொரு துரோகத்தையும் நான் லிஸ்ட் போட்டு எல்லாரிடமும் கூறிவிடுவேன் என கூற அர்ச்சனா முகம் சுருங்குகிறது இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.