சந்தியாவிற்கு வந்த ஹால் டிக்கெட்டை மறைத்த சிவகாமி.! போஸ்ட் ஆபீஸ் செல்லும் சரவணன்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

raja-rani-20

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது ராஜா ராணி குடும்பத்தினர்கள் தென்காசிக்கு வந்துள்ளனர. தங்களது வீட்டிற்கு போனவுடன் அனைவரும் அமர்ந்து சென்னையில் நடந்ததை பற்றிய கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பாரதி கண்ணம்மா பிரிந்து வாழ்வது மற்றும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்து அதில் ஒன்று பாரதியிடம் வளர்வது என அனைத்தையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு மயிலிடம் சாமியார் பற்றி கேட்க அவர் ஜெயிலில் இருக்கிறார் இந்த காலத்திற்கு வெளியில் வர முடியாது என கூறுகிறாய். பிறகு சரவணன் நல்ல வேலை கோச்சிங் கிளாஸ்க்கு எந்த பிரச்சனையும் வரவில்லை எனக் கூறியதற்கு சந்தியா கோச்சிங் கிளாஸ் எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் எக்ஸாம் தான் எழுத வேண்டும் எனக் கூறுகிறார்.

Raja Rani 2 serial
Raja Rani 2 serial

வீட்டிற்கு ஹால் டிக்கெட் வந்துவிடும் என கூறிவிட்டு அனைவரும் அவரவர்கள் இன்றும் இருக்கு சென்று விடுகிறார்கள் பிறகு சிவகாமி மட்டும் வீட்டின் வெளியே அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது போஸ்ட்மேன் ஒருவர் வந்து சந்தியாவிற்கு போஸ்டர் வந்து இருப்பதாக கூறுகிறார். அதனை வாங்கிய சிவகாமிக்கு ஹால் டிக்கெட் என்பது தெரிய வந்ததால் அதனை சந்தியாவிடம் கொடுக்காமல் மறைத்து விடுகிறார்.

சந்தியாவும் சரவணனும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சந்தியாவிற்கு கிளாஸ்மேட் ஒருவர் போன் செய்து எக்ஸாம் எழுத பயமாக இருக்கிறது என்று கூறிவிட்டு ஹால் டிக்கெட் வந்திருக்கும் விஷயத்தையும் கூறுகிறார். எனவே சந்தியா மயில் உள்ளிட்ட அனைவரிடமும் கார்த்திகட்டை பற்றி கேட்க அனைவரும் இன்னும் வரவில்லை என கூறிவிடுகிறார்கள்.

Raja Rani 2 serial

பிறகு சரவணனுக்கு சந்தேகம் வர போஸ்ட் ஆபீஸ் சென்று கேட்டால் தெரிந்துவிடும் எனக் கூறுகிறார் சிவசாமி தடுக்க முயற்சித்தும் நான் போய் கேட்டு வருகிறேன் என சரவணன் கிளம்பி விடுகிறார். பிறகு சிவகாமியின் கணவருக்கு சிவகாமியின் மீது சந்தேகம் ஏற்பட கொஞ்சம் பேச வேண்டும் என கூறுகிறார் அதாவது இன்னும் உனக்கு சந்தியாவின் மீது கோபம் குறையலையா என கேட்க சிவகாமி அதிர்ச்சடைகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.