ஆதியின் முகத்திரையைக் கிழித்து குடும்பத்தினர்களுக்கு முன்பு அவமானப்படுத்திய சந்தியா.! அவமானத்தில் தலை குனிந்த சிவகாமி..

raja rani 1
raja rani 1

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது எதிர்பாராத பல சுவாரசியமான கதைய அம்சங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ராஜா ராணி 2.தற்போது சரவணனின் தம்பி ஆதி ஜெசி என்ற பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றி தற்பொழுது அந்த பெண் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் உன்ன மாதிரி ஒழுக்கம் கெட்ட ஒரு பெண்ணை எங்கள் வீட்டில் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என கூறி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஆதியை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நம்பி வரும் நிலையில் அர்ச்சனா ஜெசி மற்றும் ஆதி இருவரும் காதலித்தார்கள் என்ற உண்மையை சந்தியாவிடம் கூறிவிடுகிறார் பிறகு சரவணன் மற்றும் சந்தியா இருவருக்கும் ஆதியின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.மேலும் ஜெசியம் சந்தியாவை சந்தித்து தனக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகிறார்.

இவ்வாறு மறுபுறம் சிவகாமி தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்பதற்காக வேறு ஒரு பெண்ணை பெண் பார்ப்பதற்காக செல்கிறார்.இவ்வாறு அதற்கு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் செல்கிறார்கள் அங்கு மணப்பெண் ஆதியிடம் தனியாக பேச வேண்டும் என கூறுகிறார்.

எனவே ஒரு அறைக்குள் சந்தோஷமாக செல்ல அங்கு ஜெசி இருக்கிறார் இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த ஆதி பிறகு நீ முதலில் கர்ப்பமான விஷயத்தை என்னிடம் சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு என்னுடைய குடும்பத்தின் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி விட்டாய் என மிகவும் கேவலமாக பேசுகிறான்.

பிறகு நீ கர்ப்பமாக இருப்பதை கலைத்துவிட்டு வேற வேலை இருந்தா பாரு என கூற பிறகு ரூமை விட்டு வெளியே வரும் பொழுது மொத்த குடும்பமும் கதவியின் முன் நின்று கொண்டிருக்கிறது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் பிறகு நம்பிக்கை வைத்த என்னுடைய மகன் இப்படி செய்து விட்டானே என தாங்க முடியாமல் சிவகாமி கதிரை அழுகிறார்.

இவ்வாறு ஆதியின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என பெண்பார்ப்பதற்காக அழைத்து சென்றதற்கு முக்கிய சந்தியா தான் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அனைவருக்கும் உண்மை தெரிய வந்துள்ள நிலையில் ஜெசி மற்றும் ஆதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.