குடும்ப மானத்தை காப்பாத்த போலீஸ் ஸ்டேஷனில் கெஞ்சி கதறும் சந்தியா.! திமிரின் உச்சத்தில் இருக்கும் ஆதி..

raja rani 2
raja rani 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது எதிர்பார்க்காத பல எபிசோடுகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2.இந்த சீரியலில் சிவகாமியின் இளைய மகன் ஆதி ஜெசி என்ற பெண்ணை துரத்தி துரத்தி காதலித்து தற்பொழுது அவரை ஏமாற்றி வருகிறார்.

அதாவது ஜெசி தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஆதி தான் என்னுடைய புருஷன் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆதி தான் அப்பா என நியாயம் கேட்டு போராடி வருகிறார். அதாவது தற்பொழுது நடுரோட்டில் ஆதியை நிற்க வைத்து இந்த குழந்தைக்கு அப்பாவாக நீ இருந்துகிட்டு ஏன் இப்படி பண்ற என கேட்கிறார் அதற்கு ஆதி முதலில் நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை என்னிடம் வந்து சொல்லி இருக்க வேண்டும்.

அப்படி சொல்லி இருந்தால் என்னுடைய அம்மாவிடம் எப்படியாவது பேசி சம்மதம் வாங்கி இருப்பேன் ஆனால் இதற்கு மேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவளை ஒழுக்கம் இல்லாதவள் என சொல்வார்கள்.

ஆகையால் என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஜெசியிடம் திமிராக பேசுகிறார் பிறகு ஜெசி இனிமேல் உன்னிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை எனக்கு சந்தியா நிச்சயம் உதவுவார் என கூறுகிறார்.பிறகு அவரை வைத்து உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு தன்னுடைய குடும்பத்தினர்களிடம் கூறி தனது அம்மா, அப்பாவை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்.

அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சந்தியாவும் கமிஷ்னர் ஆபிஸ்க்கு செல்கிறார் பிறகு அவர்களிடம் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம் கண்டிப்பாக தன்னுடைய குடும்பத்தினருக்கு ஆதியின் உண்மையான குணத்தை காமித்து என்னுடைய மாமியார்,மாமனார் என அனைவரையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறேன் எனவே கேஸ் போட வேண்டாம் என கெஞ்சுகிறார். பிறகு ஜெஸ்ஸியின் அம்மா அப்பாவும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என கூறுகிறார்கள் இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.