குடும்பத்தினர்களிடம் வசமாக சிக்கிய ஆதி.! அதற்குள் வேறு ஒரு திருமணம் நடத்த முயற்சி செய்த சிவகாமி..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா தன்னுடைய சின்ன வயது கனவான ஐபிஎஸ் கனவய் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் பிறகு இவருக்கு திடீரென திருமணமாகி விடுகிறது. திருமணத்திற்கு பிறகும் இவருடைய ஆசையை தெரிந்து கொண்டு கணவரும் சந்தியாவிற்கு உதவுகிறார்.

ஊர்,உலகத்தில் நடக்கும் அநியாயங்கள் மட்டுமல்லாமல் தனது வீட்டில் நடக்கும் அநியாயங்களையும் கண்டுபிடித்து தப்பு செய்தவர்களுக்கு தண்டனை அளித்து வருகிறார்.சொந்த வீட்டிலேயே இருந்த பொறுக்கியை கையும் களவுமாக பிடிக்க உள்ளார் அதாவது சிவகாமியின் இளைய மகன் ஆதி ஜெசி என்ற பெண்ணை காதலித்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உள்ளார்.அவர் அர்ச்சனாவின் வளையகாப்பு நிகழ்ச்சிக்கு வரும்போது மயங்கி விழ பிறகு அனைவருக்கும் ஜெசி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.

இதனால் ஜெசியை வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என சிவகாசி சொல்ல ஆதி தான் இந்த குழந்தைக்கு அப்பா என கத்தி அனைவரிடமும் சொல்லிவிடுகிறார். ஆனால் இந்த வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆதி கூற சந்தியாவிற்கு ஆதியின் மீது சந்தேகம் ஏற்படுகிறது மேலும் அர்ச்சனாவும் ஆதி ஜெசி இருவரும் காதலித்ததை சந்தியாவிடம் கூறி விடுகிறார்.

இதனால் சந்தியா சரவணன் இடம் ஒரு முறை ஆதியை கூப்பிட்டு விசாரிங்கள் எனக் கூற பிறகு ஆதிக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடலாம் என சிவகாமி திட்டம் போட்டு பொண்ணு பார்ப்பதற்காக ஒரு வீட்டிற்கு செல்கிறார்கள் அங்கு அந்தப் பெண் ஆதியிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூற பிறகு உள்ளே போனதும் ஜெசி இருக்கிறார்.

அப்பொழுது ஜெசி உன்னுடைய குழந்தை என் வயிற்றில் வளருது உனக்கு இன்னொரு திருமணமா எனக் கூற ஜேசியிடம் நீ கர்ப்பமானதை முதலில் என்னிடம் சொல்லி இருக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொன்னது உன்னுடைய தப்பு என கத்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.