இந்த பொண்ணு யாருனே தெரியாது என சிவகாமியிடம் கூறிய ஆதி.. வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஜெசி.!

raja-rani-2
raja-rani-2

சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் ஒரு சில சீரியல்கள் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் எதிர்பார்க்கும் வகையில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் ஒன்றுதான் ராஜா ராணி 2 இந்த சீரியல் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் தற்பொழுது அர்ச்சனாவுக்கு மிகவும் கோலாகலமாக வளைய காப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது மேலும் ஆதியின் காதலி ஜெஸ்ஸியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் எதிர்பாராத விதமாக அனைவர் முன்பும் ஜெசி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் சரவணனின் பாட்டி ஜெஸ்சியின் கையைப் பிடித்து பார்க்கும் பொழுது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என அனைவருக்கும் தெரிய வருகிறது.

உடனே சிவகாமி அவரை கண்டபடி திட்டி வீட்டை விட்டு வெளியே போகவும் மாறு தரவென இழுத்துச் செல்கிறார் பிறகு ஜெசி இது என்னுடைய புருஷன் வீடு என் கர்ப்பத்திற்கு காரணமானவர் இங்குதான் இருக்கிறார் என கூற அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். பிறகு ஆதி தான் என் கர்ப்பத்திற்கு காரணம் என எல்லோரும் முன்னிலையிலும் ஜெசி கூறிவிடுகிறார்.

இதனை கேட்ட சிவகாமி, சரவணன், சந்தியா உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு ஆதியிடம் சிவகாமி எதுவும் கேட்காமல் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார்.அதன் பின்பு அந்த பொண்ணு சொல்றதெல்லாம் உண்மையில்லை என ஆதி கூறுகிறார். அந்த பொண்ண எனக்கு தெரியாது ரெண்டு மூணு தடவை பார்த்து இருக்கிறேன் அவ்வளவுதான் அதுக்கு மேல எங்களுக்குள்ள எதுவுமே கிடையாது என அனைத்தையும் மறைப்பது போல் பேசி வருகிறார்.

அது பிறகு இதனை கேட்டவுடன் ஜெசி என்ன சொல்வது என்று தெரியாமல் பேர் அதிர்ச்சியில் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்.இதனை தொடர்ந்து ஜெசி அர்ஜுனாவிடம் நாங்கள் இரண்டு பேரும் காதலித்த விஷயம் உங்களுக்கு தெரியும் இல்ல நீங்க சொல்லுங்க என கெஞ்சுகிறார். ஆனால் அர்ச்சனா அதற்கு ஒன்றும் தெரியாதது போல் அப்படியே அமைதியாக நிற்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சிவகாமி ஜெசியை வீட்டை விட்டு வெளியே துரத்த நீதி கிடைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என வீட்டின் முன்னால் தர்ணா செய்கிறார்.இந்த நேரத்தில் ஜெசியின் பெற்றோர்கள் வந்து நடந்ததை கேட்டு ஜெசியை அடிக்கின்றனர். இதோட இந்த எபிசோட் முடிவடைந்த நிலையில் இதற்கு மேல் சந்தியா இந்த விஷயத்தில் ஈடுபட்டு உண்மைகளை கண்டுபிடித்து ஜெசிக்கும் நீதி வாங்கி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.