விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது எதிர்பாராத பலத் திருப்புங்கள் இருந்து வருகிறது.தன்னுடைய சிறுவயது கனவான போலீசாக வேண்டும் என்பதற்காக சந்தியா பல கஷ்டங்களை அனுபவித்து வந்தார் அந்த வகையில் தற்பொழுது போலீஸ் எக்ஸாமை எழுதி முடித்துள்ளார் மேலும் அதற்கான ரிசல்ட் வர இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது சிவகாமியின் இளைய மருமகள் அர்ஜுனாவிற்கு வீட்டில் வளைகாப்பு நடைபெறுகிறது.
இந்த விசேஷத்தில் ஆதியின் காதலி ஜெசியும் கலந்து கொள்கிறார் மேலும் அர்ச்சனா தான் ஜெசியை வர வைத்திருந்தார். இவ்வாறு இந்த நேரத்தில் ஜெசி அனைவரும் முன்பும் மயங்கி விழுந்தது விடுகிறார் பிறகு சரவணன் பாட்டி ஜெசியை கையைப் பிடித்து பார்த்துவிட்டு இவர் கர்ப்பமாக இருப்பதை அனைவருக்கும் தெரிய வைக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் கால் கூர இந்த வீட்டில் படக்கூடாது என ஜெசியை வீட்டை விட்டு வெளியே செல்கிறார் சிவகாமி.உடனே ஆத்திரமடைந்த ஜெசி தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆதி தான் அப்பா எனக் கூறுகிறார் இதனால் ஆதியின் குடும்பம் தலை குனிந்து நிற்கிறது. இந்த நேரத்தில் சரவணன் ஆதியை அடிக்கிறார் இந்த பொண்ணு சொல்றதெல்லாம் உண்மைதானா என கேட்க இந்த ஜெஸ்சியின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சடைகிறார் ஜெசி இந்த நேரத்தில் ஜெசியின் அம்மா, அப்பா இருவரும் சரவணன் வீட்டிற்கு வருகிறார்கள் எனவே போலீசர்களிடம் புகார் அளித்தால் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என ஜெசியின் அம்மா, அப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற புகார் அடிக்கிறார்கள் இதன் காரணமாக போலீசார்களும் ஆதியை கைது செய்கின்றனர்.
இவ்வாறு சந்தியாவிற்கு ஆதியின் மீது சந்தேகம் இருந்து வந்த நிலையில் ஆதி ஜெஸி இருவரும் தங்கி இருந்த ஹோட்டலில் இருக்கும் கேமராவின் மூலம் ஆதரங்களை தெரிந்து கொண்டு சிவகாமியிடம் போட்டு காண்பிக்கிறார். மேலும் சரவணனும் ஆதியை நம்பி வந்த நிலையில் அனைவருக்கும் உண்மைகள் தெரிய ஆதி இவ்வளவு பெரிய கேவலமான செயலை செய்திருப்பது தெரிய வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.